அமெரிக்காவில் 61 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு!

coronavirus

அமெரிக்காவில் ஒரே நாளில் 33,981 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் கொரோனா பாதிப்பிலும் உயிரிழப்பிலும் அமெரிக்காவே தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.

கொரோனா பாதிப்பிலிருந்து தென் கொரியா, தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகள் மீண்ட நிலையில், அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகள் கடுமையான பாதிப்பைச் சந்தித்து வருகின்றன.

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 33,981 பேருக்கு கொரோனா வைரஸ் பரவி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு குறைந்து காணப்பட்ட கொரோனா பாதிப்பு மீண்டும் வேகமெடுக்க தொடங்கியுள்ளது. கடந்த வாரத்தில் மட்டும் அமெரிக்காவின் 29 மாநிலங்களில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ளது. நாளுக்கு நாள் தொற்று ஏற்படுவோரின் எண்ணிக்கை உயர்ந்த வண்ணமே இருக்கிறது.

குறிப்பாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாவது வருத்தமளிப்பதாக கூறுகின்றனர் மருத்துவர்கள். ஃபுளோரிடா, கலிபோர்னியா, டெக்சாஸ் ஆகிய மாநிலங்களில் பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. மக்கள் முகக்கவசம் அணிய மறுப்பது சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருப்பது உள்ளிட்டவைகளே பெருமளவில் வைரஸ் பரவ காரணமாக சொல்லப்படுகிறது. கொரோனாவின் முதல் அலையில் இருந்தே அமெரிக்கா இன்னும் மீண்டு வரவில்லை என்கின்றனர் நிபுணர்கள்.

இந்நிலையில் அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 33,981 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 369 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் அமெரிக்காவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 61 லட்சத்து 73 ஆயிரத்தை தாண்டியுள்ளது. 1,87,224 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 34 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். குறிப்பாக கலிபோர்னியாவில் 7 லட்சத்துக்கும் அதிகமானோரும், டெக்சாஸ் மற்றும் புளோரிடாவில் 6 லட்சத்துக்கும் அதிகமானோரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இதையும் படிக்கலாமே: பிரேசிலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் அமெரிக்க இந்திய மருத்துவர்!

அமெரிக்க செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

FB Page
http://- https://www.facebook.com/tamilmicsetusa

FB Group
– https://www.facebook.com/groups/usatamilnews/

Twitter
https://twitter.com/tamilmicsetusa