அமெரிக்க தேர்தலில் சீனா, ரஷியா, ஈரான் நாடுகள் ஆதிக்க செலுத்த முயற்சிக்கிறது: புலனாய்வுத்துறை

அமெரிக்க அதிபர் பதவிக்கு வருகிற நவம்பர் மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் ட்ரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடனும் போட்டியிடுகிறார். கொரோனா பரவலுக்கு மத்தியிலும் பல மாகாணங்களில் அதிபர் ட்ரம்ப், தீவிர தேர்தல் பிரச்சாரங்களை முன்னெடுத்துவருகிறார். ஆனால் கொரோனா பரவலை தடுக்க தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடப்போவதில்லை என ஜோ பிடன் தெரிவித்துள்ளார். மாறாக இணையவழி பிரச்சாரத்தை கையில் எடுத்துள்ள ஜோ பிடன் அதிபர் ட்ரம்ப் தலைமையிலானரசு கொரோனா விவகாரத்தை திறம்பட கையாளவில்லை, கறுப்பின மக்களுக்கு ட்ரம்ப் ஆட்சியில் பாதுகாப்பில்லை எனக் கூறி வாக்குகளை சேகரித்துவருகிறார். அமெரிக்க அதிபர் தேர்தலில், இந்திய வம்சாவளி வாக்காளர்களின் ஓட்டு, பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறப்பட்ட நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் தேர்தல் பரப்புரையை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளியினர் இணையத்தில் பார்த்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

US polls

அதிபர் ட்ரம்புக்கும் ஜோ பிடனுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவிவரும் நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் சீனா, ரஷியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் செல்வாக்கு செலுத்த விரும்புவதாக அமெரிக்க உயர் உளவுத்துறை தலைவர் வில்லியம் இவானினா எச்சரித்துள்ளார். வாக்களிப்பை தடுக்க ரகசியமாகவும், வெளிப்படையாகவும் ஆதிக்கம் செலுத்திவருவதாகவும் வில்லியம் இவானினா தெரிவித்துள்ளார். குறிப்பாக அதிபர் ட்ரம்ப், அதிபர் தேர்தலில் சீனா விரும்பவில்லை என்றும், ஜோ பிடனை அதிபராக்க ரஷ்யா விரும்புவதாகவும் அமெரிக்க புலனாய்வுத்துறை தெரிவித்துள்ளது. வாக்காளர் விருப்பங்களைத் திசைதிருப்பவும் வெளிநாடுகள் முயற்சிப்பதாகவும் அமெரிக்கா குற்றஞ்சாட்டுகிறது.

இதையும் படிக்கலாமே: டிக்டாக், வீசாட் நிறுவனத்துடன் பரிவர்த்தனை வைத்துக்கொள்ளக்கூடாது: ட்ரம்ப்