ஜோ பிடனுக்காக கைகோர்த்த அமெரிக்க வாழ் இந்திய, பாகிஸ்தானியர்!

joe biden kamala harris

அமெரிக்கா அதிபர் தேர்தலில் இந்திய அமெரிக்கர்களில் பெரும்பாலானோர் ஜோ பைடனுக்கே ஆதரவளித்துள்ளனர்.

ஜோ பைடனுக்காக இந்திய அமெரிக்கர்களும் , பாகிஸ்தான் அமெரிக்கர்களும் ஒன்றிணைந்த சுவாரஸ்யமும் நிகழ்ந்துள்ளது.

அமெரிக்கா அதிபர் தேர்தலில் முன்னெப்போதும் இல்லாத அளவு இந்திய அமெரிக்கர்களின் வாக்குகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

அமெரிக்காவில் கிட்டதட்ட 45 லட்சம் இந்தியர்கள் வசிக்கின்றனர். இவர்களில் 26 லட்சம் பேர் அமெரிக்க குடிமக்களாக உள்ளனர். இதில் 19 லட்சம் பேர் தேர்தலில் வாக்களிக்கும் தகுதியை பெற்றுள்ளனர்.

அமெரிக்கா வாக்காளர்களில் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட வாக்காளர்கள் 0.82 சதவிகிதம் உள்ளனர்.

இந்திய அமெரிக்கர்களை பொறுத்தவரை தொன்று தொட்டே ஜனநாயக கட்சி ஆதரவாளர்களாகவே இருக்கின்றனர்.

அதனை களைந்து இந்திய அமெரிக்கர்களின் ஆதரவை பெறுவதற்காக குடியரசு கட்சி சார்பில் கடந்த ஆண்டு ஹூஸ்டனில் ஹவுடி மோடி நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இதில் பிரதமர் மோடி வெளிப்படையாகவே ட்ரம்புக்கு ஆதரவினை தெரிவித்தார்.

பதிலுக்கு இந்தியாவிலும் நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இது போக இந்திய அமெரிக்கர்களை கவர்வதற்காகவே ட்ரம்ப் பரப்புரை குழு தனி பரப்புரை வீடியோக்களை வெளியிட்டது.

அதே வேளையில் ஜனநாயக கட்சியோ இந்தியாவை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரீஸை துணை அதிபர் வேட்பாளராக நிறுத்தியுள்ளது.

Shekar Narasimhan with presidential candidate Joe Biden

எனவே இம்முறை இந்திய அமெரிக்கர்களின் வாக்கு எவ்வாறு பிரியும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது. இந்திய அமெரிக்கர்கள் வாக்களிக்கும் போது, இரு நாட்டு நல்லுறவை விட அமெரிக்காவின் பொருளாதாரம், சுகாதாரம் உள்ளிட்டவைகளையே கணக்கில் கொள்கின்றனர் என்கிறது ஒரு ஆய்வு.

இது ஒரு புறமிருக்க ஜோ பைடனுக்காக இந்திய அமெரிக்கர்களும் , பாகிஸ்தான் அமெரிக்கர்களும் ஒன்றிணைந்து பணியாற்றுவதும் தெரிய வந்துள்ளது. ஜனநாயக கட்சிக்கு ஆதரவு என்ற ஒற்றை கருத்தில் இவர்கள் இணைந்துள்ளனர்.

2016ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலின் போது, 77 சதவிகித இந்திய அமெரிக்கர்கள் ஜனநாயக கட்சிக்கும், 16 சதவிகிதம் பேர் ட்ரம்புக்கும் வாக்களித்தனர். பாகிஸ்தான் அமெரிக்கர்களை பொறுத்தவரை, 88 சதவிகிதம் பேர் ஹிலாரிக்கும், 5 சதவிகிதம் பேர் ட்ரம்புக்கும் வாக்களித்தனர்.

பாகிஸ்தான் அமெரிக்கர்கள் இ்ந்த முறையும் இதே எண்ணிக்கையில் ஜனநாயக கட்சி ஆதரவளிப்பர் என சொல்லப்படுகிறது. இந்திய அமெரிக்கர்கள் இடையே சிறிது மனமாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் 70 சதவிகிதம் பேர் பைடனுக்கும், 22 சதவிகிதம் பேர் ட்ரம்புக்கும் ஆதரவளிக்கின்றனர். தேர்தல் முடிவுகள் வெளியான பிறகே உண்மை நிலவரம் வெளிவரும்.

இதையும் படிக்கலாமே:  ஏர் கண்டிஷனருக்கு மாற்று வழி! அசத்தும் அமெரிக்க பொறியாளர்கள்

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter