அமெரிக்காவின் 46ஆவது அதிபரானார் ஜோ பைடன்!

joe biden

அமெரிக்காவில் கடந்த 3 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடந்து முடிந்தது. கடந்த 5 தினங்களாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வந்தது.

வாக்கு எண்ணிக்கையில் ஆரம்பம் முதல் ஜனநாயக கட்சியின் வேட்பாளரும், முன்னாள் துணை அதிபருமான ஜோ பைடன் முன்னிலையில் இருந்தார்.

குடியரசு கட்சியின் கோட்டையாக விளங்கும் ஜார்ஜியாவில் நேற்று வரை அதிபர் ட்ரம்ப் முன்னிலையில் இருந்தார். திடீரென நேற்று இரவு ஜார்ஜியாவில் பைடன் முன்னிலைக்கு வந்தார்.

எனினும், ஜார்ஜியாவில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இன்று பென்சில்வேனியா மாகாணத்தில் ஜோ பைடன் வெற்றிபெற்றதையடுத்து ஜோ பைடன் பெரும்பான்மையை பெற்றுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற மொத்தம் 270 வாக்குகள் தேவை. பென்சில்வேனியாவில் வெற்றிபெற்றதன் ஜோபைடன் வெற்றிப்பெற்றதால் 284 வாக்குகள் பெற்று பைடன் அதிபரானார்.

Democratic presidential candidate, former Vice President Joe Biden, speaks during a campaign event, Tuesday, July 14, 2020, in Wilmington, Del. (AP Photo/Patrick Semansky)

யார் இந்த ஜோ பைடன்?

ஜோ பைடனின் முழு பெயர் ஜோசப் ராபினெட் பைடன். அவருக்கு வயது 77. அமெரிக்காவின் 46ஆவது அதிபராக ஜோ பைடன் வெற்றிபெற்றுள்ளார். இதனால் ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபராக போட்டியிட்ட கமலா ஹாரிஸ் வெற்றிபெற்றுள்ளார். இதன் மூலம் அமெரிக்காவின் முதல் இந்திய அமெரிக்க மற்றும் கருப்பின பெண் துணை அதிபர் என்ற பெயர் கமலா ஹாரிஸ்க்கு கிடைத்துள்ளது. கமலா ஹாரிஸின் தாயார் திருவாரூர் மாவட்டம் துளசேந்திரபுரத்தை சேர்ந்தவர். எனவே அவர் வெற்றிப்பெற வேண்டுமென துளசேந்திரபுரத்தில் பல்வேறு சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் நடத்தப்பட்டன என்பது குறிப்பிடதக்கது.

வெற்றிக்கு பின் ஜோ பைடன் தனது ட்விட்டர் பக்கத்தில், “அமெரிக்கா இந்த மாபெரும் வல்லரசு நாட்டுக்கு தலைமையேற்க என்னை தேர்வு செய்தது பெருமையளிக்கிறது. இந்த வேலை மிகவும் கடினமானது. ஆனால், எனக்கு வாக்களித்தாலும், வாகளிக்காவிட்டாலும் எல்லா அமெரிக்கர்களுக்குமான அதிபராக நான் இருப்பேன். என் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பாற்றுவேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்கலாமே: பதவியிலிருந்து இறங்க அடம் பிடித்த ‘அதிபர் ட்ரம்ப்’… வைரலாகும் வீடியோ

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter