அமெரிக்க வாழ் இந்துக்களின் வாக்கு யாருக்கு என காணொலி மூலம் விவாதம்

அமெரிக்க அதிபர் பதவிக்கு வருகிற நவம்பர் மாதம் 3 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் ட்ரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடனும் போட்டியிடுகிறார்.

கொரோனா பரவலுக்கு மத்தியிலும் பல மாகாணங்களில் அதிபர் ட்ரம்ப், தீவிர தேர்தல் பிரச்சாரங்களை முன்னெடுத்துவருகிறார்.

Donald Trump

கொரோனா உள்பட பல்வேறு பிரச்னைகளில் டொனால்டு ட்ரம்ப்புக்கு எதிராக மக்களின் மனநிலை மாறியிருப்பதால், தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடெனுக்கு வாய்ப்புகள் அதிகரித்து வருவதாக கருத்துக் கணிப்புகளில் தெரியவந்துள்ளது.

2016 தேர்தலிலும் கருத்துக்கணிப்பு முடிவுகள் தனக்கு எதிராக இருந்ததாகவும், ஆனால் தேர்தல் முடிவுகள் அதனை பொய்யாக்கியதாகக் கூறும் ட்ரம்ப் தரப்பு, தற்போதும் அப்படியே நடக்கும் என நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.

அமெரிக்காவில் சுமார் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்துக்கள் உள்ளனர். அதாவது கடந்த 2016 ஆம் ஆண்டு கணக்கின்படி, அமெரிக்க மக்கள் தொகையில், ஒரு சதவீதத்துக்கும் அதிகமானோர் இந்துக்கள்.

இவர்களின் வாக்குகளை கவர குடியரசு மற்றும் ஜனநாய கட்சியினர் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர்.

To whom do the American living Hindus vote in the presidential election?

இந்நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்பது தொடர்பாக அமெரிக்க வாழ் இந்துக்கள் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினர். அப்போது சிலர் டிரம்புக்கு ஆதரவாகவும் அவர் இந்தியர்களுக்கு வழங்கியுள்ள சலுகைகள் பற்றியும் கூறியிருக்கின்றனர். மற்றொரு தரப்பினர் கமலா ஹாரிஸை முன்னிறுத்தி பேசி ஜனநாயக கட்சியை ஆதரிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இதனால் அமெரிக்க வாழ் இந்துக்களின் ஓட்டு அதிகளவில் யாருக்கு கிடைக்கப்போகிறது என்பதில் குழப்பம் நீடிக்கிறது.

இதையும் படிக்கலாமே:  பரப்புரை கூட்டத்தில் ட்ரம்பை சாடிய ஒபாமா!

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter