பைடன் வென்றது செல்லும்! ட்ரம்பிற்கு குட்டு வைத்த நீதிமன்றம்

trump

அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வியை சந்தித்துள்ள ட்ரம்பிற்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தும் வகையில் நீதிமன்றம் தீர்ப்பளித்துளது.

அமெரிக்காவில் நவம்பர் 3-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது.

இந்தத் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பாக டொனால்டு ட்ரம்ப்பும், ஜனநாயக் கட்சி சார்பாக ஜோ பைடனும் போட்டியிட்டனர்.

கருத்துக்கணிப்புகளின் முடிவுகளைப் போலவே ஜோ பைடன் முன்னிலை பெற்று வெற்றியை ஈட்டினார்.

ஒருவார இழுபறியாக இருந்தாலும் அதிபருக்கான மெஜாரிட்டியான 270 வாக்குகளை விட அதிகளவில் ஜோ பைடன் பெற்றார்.

306 வாக்குகளைப் பெற்று அதிபராக எந்தத் தடையும் இல்லாமல் பயணிக்கிறார் ஜோ பைடன். ஆனால், ட்ரம்ப் இன்னும் பிடிவாதமாக இருக்கிறார்.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் பிரசாரக் குழு, பென்சில்வேனியா மாநிலத் தேர்தல் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அம்மாநில உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. அதனை அம்மாநில நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அப்பவும் விடா புடியாக இருந்த ட்ரம்ப் தரப்பு அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அதனை விசாரித்த உச்சநீதிமன்றம் கீழமையின் தீர்ப்பு செல்லும் எனக்கூறி மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது. மேலும் பென்சில்வேனியாவில் ஜோ பைடன் 80,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றது செல்லும் என்றும் தெரிவித்தது.

வெற்றியை அமெரிக்க மக்கள் மட்டுமே தீர்மானிப்பாளர்கள் என்ற நீதிபதிகள் அதில் வழக்கறிஞர்களுக்கும் நீதிபதிகளுக்கும் எந்த ஒரு பங்கும் இல்லை என தெரிவித்தனர்.

முன்னதாக அதிபர் தேர்தலில் பைடன் வெற்றிப்பெற்றதாக தேர்வாளர்கள் குழு அறிவித்தால் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறத் தயார் என்று அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார். அடுத்த மாதம் 14ஆம் தேதி தேர்வாளர்கள் குழு அதிபர் தேர்தல் முடிவு மீது வாக்களிக்கவிருக்கிறது.

இதையும் படிக்கலாமே: ஹனிமூன் சென்ற தம்பதிக்கு நேர்ந்த கொடுமை!

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter