ஜோ பிடனுக்கு 70% இந்தியர்கள் ஆதரவு! காரணம் இதுதானா?

joe biden

அமெரிக்காவில் அதிபருக்கான தேர்தல் வரும் நவம்பர் 3 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலின் போது குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது திட்டங்கள், கொள்கைகள் குறித்து மக்களுக்கு தெரியப்படுத்த நேருக்கு நேர் விவாதம் நடத்துவர். அதன் படி அதிபர் வேட்பாளர்கள் மூன்று முறை நேருக்கு நேர் விவாதம் நடத்துவது வழக்கம். அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரை எதிர்த்து போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் இடையே ஒஹியோ மாகாணம் கிளீவ்லேண்டில் முதல் விவாதம் நடைபெற்றது.

விவாதம் முடிந்த சில நாட்களில் அதிபர் ட்ரம்ப் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால், இரண்டாவது விவாதத்தை காணொலி மூலம் நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால், அதற்கு ட்ரம்ப் ஒப்புக் கொள்ளவில்லை. மேலும், கொரோனாவில் இருந்து பாதிப்பில் இருந்து ட்ரம்ப் முழுமையாக நீங்கினால் மட்டுமே அவருடன் நேருக்கு நேர் விவாதிக்கப் போவதாக பிடன் அறிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து, மியாமியில் வரும் 15 ஆம் தேதி நடைபெறவிருந்த இரண்டாவது விவாதம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 22 ஆம் தேதி நடைபெறும் மூன்றாவது விவாதத்திற்கான ஏற்பாடுகள் மட்டும் தற்போது நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

trump vs joe biden
இந்நிலையில் ஐ.ஏ.ஏ.எஸ் எனப்படும் அமைப்பு இந்திய அமெரிக்கர்களிடம் நடத்திய கருத்துக்கணிப்பில் 56% பேர் தங்களை ஜனநாயக கட்சிக்கு ஆதரவாகவும், 15% பேர் குடியரசு கட்சிக்கு ஆதரவாகவும் வாக்களித்திருந்தனர். இந்திய அமெரிக்க வாக்காளர்களில் 70 சதவீதத்திற்கும் அதிகமானோர் பிடனுக்கு வாக்களிக்க உள்ளதாக கருத்து தெரிவித்துள்ளனர். 22 சதவீதம் பேர் மட்டுமே டிரம்பிற்கு வாக்களிப்போம் என தெரிவித்துள்ளனர். பொருளாதாரம் மற்றும் சுகாதார பாதுகாப்பு ஆகியவற்றுக்கு முன்னுரிமை கொடுத்தே வாக்களிப்போம் என்றும் இந்திய வம்சாவளியின் வெளிப்படையாக தெரிவித்துள்ளனர்.

குடியரசுக் கட்சியை விட ஜனநாயக கட்சி வெற்றிப்பெற்றாலே இந்திய அமெரிக்க உறவு பலபெரும் என நம்புகின்றனர். இந்திய வம்சாவளியினரின் வாக்கு ஜோ பிடனுக்கு கிடைக்க மற்றொரு முக்கிய காரணம் கமலா ஹாரிஸ். அவர் இந்திய வம்சாவளி என்பதாலும் ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் வேட்பாளராக கள மிறங்குவதாலும் இந்திய வம்சாவளியினர் இத்தகைய முடிவுக்கு வந்திருப்பதாக சொல்லப்படுகிறது. 67 சதவீத இந்துக்களும், 82% முஸ்லிம்களும் பிடனை ஆதரிக்கின்றனர். கிறிஸ்தவர்களில் பெரும்பாலானோர் ட்ரம்பையே ஆதரிப்பதாக கூறுகிறது கருத்துக்கணிப்பு.

இதையும் படிக்கலாமே:  அமெரிக்காவில் பிறந்த குழந்தையை ஜன்னல் வழியாக தூக்கி வீசிய இந்திய வம்சாவளி பெண்!

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter

 

Related posts