அமெரிக்க சுகாதாரத்துறையின் கணினிகளில் சைபர் அட்டாக்!

cyber-attacks

சீனாவின் வுகான் மாகாணத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸின் தாக்கத்திலிருந்தே மீள முடியாமல் உலக நாடுகள் தவித்துவருகின்றன.

கொரோனா வைரசால் மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

அங்கு 84 லட்சத்து 60 ஆயிரத்தும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 2 லட்சத்து 23 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியாமல் அந்நாட்டு அரசு திணறிவருகிறது. கொரோனா பெருந்தொற்றால் உலகமே சிக்கி தவித்துவரும் நிலையில் அதற்கு எதிரான தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

சுமார் 120 முன்னணி நிறுவனங்கள் தடுப்பூசி கண்டுபிடிப்பில் முனைப்புக்காட்டி வருகின்றன. இந்நிலையில் உலகிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடான அமெரிக்கா, தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் முழு மூச்சுடன் ஈடுபட்டு வருகிறது.

கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்புகளில் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கும் அமெரிக்காவில் கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனைகள் தீவிரமாக நடத்தப்பட்டு வருகின்றன.

US health system facing increased threat of cybercrime | ITIJ

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு ஒருவாரமே இருக்கும் நிலையில் அந்நாட்டு சுகாதாரத்துறையின் கணினிகள் முடக்கப்பட்டு, ரான்சம்வேர் வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. அமெரிக்க மருத்துவமனை மற்றும் சுகாதார வல்லுநர்களின் கணினிகளில் ரான்சம்வேர் வைரஸ் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன.

தகவல்களை திருடி, சுகாதார சேவையை சீர்குலைக்கவே இந்த இணைய தாக்குதல் நடைபெற்றிருப்பதாக எபி.பி.ஐ (FBI) தெரிவித்துள்ளது. இந்த மாதத்தில் மட்டும் 4 மருத்துவமனைகளில் சைபர் தாக்குதல் நடந்துள்ளது. அடுத்த சில வாரங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவமனைகளை குறிவைத்து சைபர் தாக்குதல் நடக்க வாய்ப்பிருப்பதாகவும், இத்தாக்குதல்களுக்கு ரஷ்யா காரணமாக இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

கொரோனா சம்பந்தப்பட்ட விவரங்கள் அதாவது கொரோனா நோயாளிகளின் விவரத்தை அறிந்துகொள்வதற்காக இந்த தகவல் திருடப்பட்டுள்ளதா? அல்லது அமெரிக்க தேர்தலை சீர்குலைக்க இந்த சதி திட்டம் தீட்டப்பட்டுள்ளதா? என காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிக்கலாமே: பிடன் மீதான ஊழல்களை ஊடகங்கள் மறைக்கின்றன- ட்ரம்ப்

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter