ட்ரம்ப்பை பதவி நீக்க அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் தீர்மானம்

அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் அதிபர் டொனால்டு ட்ரம்ப்பை பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.

பதவி நீக்கம் செய்திட 25ஆவது சட்டத்திருத்தத்தை செயல்படுத்துமாறு துணை அதிபர் மைக் பென்ஸை கேட்டுக்கொள்ளும் வகையில் அந்த தீர்மானத்தை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அதில், சமீபத்திய நிகழ்வுகள் தொடர்பாக ட்ரம்ப் ட்விட்டரில் இட்ட பதிவுகளில், நாடாளுமன்றம் கைப்பற்றப்பட்டதும், துணை அதிபர் மைக் பென்ஸ் தலைமறைவாகி விட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் கிளர்ச்சியாளர்களின் ஆர்ப்பாட்டங்கள் பற்றி அதிபர் டொனால்டு ட்ரம்பினால் பரவலாக விளம்பரப்படுத்தப்பட்டு, ஊக்குவிக்கப்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Donald Trump may be the first US President to be impeached twice.

ட்ரம்ப்பும் அவரது குடும்பத்தினரும் வாஷிங்டனுக்குச் செல்லும் முன்னர் கலகக்காரர்களையும், கிளர்ச்சியாளர்களையும் ஊக்குவிக்கும் வகையில் பேசியதாக தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்த தீர்மானம் கொண்டுவரப்பட்டதும் ட்ரம்ப்பின் குடியரசுக் கட்சியினர் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததால் சபை ஒத்திவைக்கப்பட்டது.

சபை இன்று மீண்டும் கூடி ட்ரம்ப்பை பதவி நீக்கம் செய்வதற்கான வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

துணை அதிபர் மைக் பென்ஸ் செயல்படத் தவறினால், அவர் மீதும் நடவடிக்கை எடுக்கும் வகையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டிருக்கின்றது.

அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் அதிபர் டொனால்டு ட்ரம்ப்பை பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், அந்நாடு பாதுகாப்பு வளாகத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

பைடனின் வெற்றியை அங்கீகரிக்க மறுக்கும் ட்ரம்பு ஆதரவாளர்கள், கடந்த 10 ஆம் தேதி அமெரிக்க நாடாளுமன்றத்திற்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தினர்.

இதேபோன்ற தாக்குதல் பைடன் பதவியேற்புக்கு முன்னரும் நிகழ வாய்ப்புள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.

மேலும் அமெரிக்காவின் 50 மாநிலங்களிலும் ஆயுதம் ஏந்திய வலதுசாரிகள் போராட்டம் நடத்தவிருப்பதாக மத்திய குற்றப்பிரிவு புலனாய்வு அமைப்பு எச்சரித்துள்ளது.

இதன் எதிரொலியால் வாஷிங்டனில் 15 ஆயிரம் பாதுகாப்புப்படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருப்பதாக தேசிய காவலர் படை பிரிவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

புதிய அதிபராக பதவியேற்கவுள்ள பைடனுக்கும் ஆயுதம் தாங்கிய ராணுவ வீரர்களுடன் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்கலாமே: ட்ரம்பால் பாதிப்பு! பைடனுக்கு கூடுதல் பாதுகாப்பு!

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter