விவசாயிகளின் மீது இந்தியா அடக்குமுறை: அமெரிக்கா காட்டம்

Joe Biden

இந்தியாவில் நடைபெற்றுவரும் விவசாயிகளின் போராட்டம், மோடி அரசின் அடக்குமுறை உள்ளிட்ட சம்பவம் குறித்து அதிபர் பைடனுக்கு அமெரிக்க வழக்கறிஞர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

இந்தியாவில் மோடி அரசு விவசாயிகளின் மீது எடுத்துவரும் அடக்குமுறை குறித்து கவனத்தில் கொள்ளுமாறு 40க்கும் மேற்பட்ட தெற்காசிய வம்சாவளி வழக்கறிஞர்கள் அதிபர் பைடனுக்கு அதிருப்தியுடன் கடிதம் எழுதியுள்ளனர்.

அந்த கடிதத்தில், “இந்தியாவில் நடைபெற்றுவரும் விவசாயிகள் போராட்டத்தில் சட்டமீறல்களும், வன்முறைகளும் நடப்பது குறித்த ஆழ்ந்த கவலைகளை வெளிப்படுத்துகிறது.

இந்தியாவை அழைத்து போராட்டக்காரர்களின் அரசியலமைப்பு உரிமைகளை மதிக்க வலியுறுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம். தங்கள் சொந்த வாழ்வாதாரத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கும்.

Farmers protest

விவசாய கலாச்சாரங்கள் மற்றும் சமூகங்களை சமரசம் செய்யும். அவர்களது சட்ட நிவாரணத்தை குறைக்கும்.

இந்தியாவின் உணவுப் பாதுகாப்பைப் பாதிப்படைய செய்யும் சட்டங்களை எதிர்த்து நாடு முழுவதும் விவசாயிகள் கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து போராடி வருவதை நீங்கள் அறிவீர்கள்.

மோடியின் திட்டங்கள் சில கார்பரேட்டுகளின் நலனுக்காக நோய் தொற்று நெருக்கடி நேரத்தில், இதனால் பாதிக்கபப்டும் விவசாயிகள் உள்ளிட்ட எவருடனும் கலந்தாலோசிக்கலாம் நாடாளுமன்றத்தில் போதுமான விவாதங்களும் நடத்தப்படாமல் அவசரகதியில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

ஒட்டுமொத்தமாக மனித உரிமைகளை மீறுதலுக்கான மிகப்பெரிய ஆபத்து இந்தியாவில் இப்போது உள்ளது.

இதனால் நிலைமையை தொடர்ந்து கண்காணிக்கவும், விவசாயிகளின் பிரச்னையை ஐநாவிலும், பிற பன்னாட்டு அமைப்புகளிலும் மற்றும் உலக அரசுகளிடமும் எழுப்புங்கள்.

போராட்டத்தை பார்வையிட ஒரு பன்னாட்டுக்குழுவை அனுப்பி வாதிட வேண்டும் என்றும்  கடிதத்தில் வலியுறுத்தியுள்ளனர்.