நடுவானில் சாதனை படைத்த அமெரிக்க கடற்படை!

aircraft

அமெரிக்க கடற்படை வரலாற்றில் முதன்முறையாக, ஆளில்லாத ட்ரோன் விமானம் மூலம் போர் விமானங்களுக்கு நடுவானில் எரிபொருள் நிரப்பப்பட்டது.

போர் அல்லது போர் பயிற்சியில் ஈடுபடும் விமானங்களுக்கு நடுவானில் எரிபொருள் கொண்டு செல்லும் போது அந்த விமானங்கள் விபத்தில் சிக்குவதால் ஏராளமான பொருள் மற்றும் உயிர் சேதம் ஏற்படுகிறது.

US Navy, Boeing conduct first-ever aerial refueling with unmanned tanker

இதனைக் கருத்தில் கொண்டு அமெரிக்கக் கடற்படை சார்பில் எம் க்யூ 25 ஸ்டிங்ரே என்ற ஆளற்ற ட்ரோன் விமானத்தை தயாரித்தனர்.

எரிபொருளைச் சுமந்து சென்ற அந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது எஃப் ஏ 18 சூப்பர் ஹார்னெட் என்ற போர் விமானம் அதனுடன் தொடர்பை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து போர் விமானத்திற்குத் தேவையான எரிபொருளை எம் க்யூ 25 ஸ்டிங்ரே வழங்கியது. இந்த வீடியோவை அமெரிக்கக் கடற்படை வெளியிட்டுள்ளது.

ஆளில்லா டேங்கர் மற்றும் ட்ரோன் மூலம் வான்வழி எரிபொருள் நிரப்பும் முறையை வெற்றிகரமாக பயன்படுத்த முடியும் என்பதை அமெரிக்க கடற்படை நிரூபித்துள்ளது.

அமெரிக்க கடற்படை ஜூன் 4 ஆம் தேதி இந்த சோதனை முயற்சியை மேற்கொண்டுள்ளது. இதுவரை இந்த முயற்சியை வேறு எந்த நாடுகளும் மேற்கொள்ளவில்லை.