இந்தியாவுக்கு ரூ.16 லட்சம் கோடி கடன் பாக்கி வைத்துள்ள அமெரிக்கா

Us flag

உலகில் மிகப்பெரிய வல்லரசு நாடாக இருக்கும் அமெரிக்கா, அதிக கடன் வைத்துள்ள நாடுகளின் பட்டியலிலும் முதலிடத்தில் உள்ளது.

வளர்ந்துவரும் நாடான இந்தியாவுக்கு அமெரிக்கா இந்திய மதிப்பில் சுமார் ₹16 லட்சம் கோடி ரூபாய் கடன் தரவேண்டுமென தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெளிநாட்டுக் கடனில் அதிக அளவு சீனாவிடமும் அதற்கு அடுத்த படியாக ஜப்பானும் இருப்பதால், கடன் வாங்குவதில் மிக மிக எச்சரிக்கையாக இருக்குமாறு அதிபர் ஜோ பைடன், தனது நிர்வாகத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

2020 ஆம் ஆண்டு அமெரிக்காவின் தேசிய கடன் 23.4 டிரில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. அதாவது ஒரு நபர் மீது 72,309 டாலர் கடனாக உள்ளது.

In January, US President Joe Biden announced a USD 1.9 trillion coronavirus relief package to tackle the economic fallout from the pandemic

இதுகுறித்து வர்ஜீனியாவை சேர்ந்த குடியரசுக் கட்சி செனட்டர், “நாம் சீனாவிற்கு மட்டுமே 1 டிரில்லியன் அமெரிக்க டாலரும், ஜப்பானுக்கும் 1 டிரில்லியன் அமெரிக்க டாலரும் கடன்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

நமது போட்டியாளரான சீனாவிடனும் அதிக கடன் பெற்றிருக்கிறோம்.

பிரேசிலுக்கு 258 பில்லியன் அமெரிக்க டாலர் கடன் பட்டிருக்கிறோம்.

இந்தியாவுக்கு 216 பில்லியன் அமெரிக்க டாலர் கடன்பட்டிருக்கிறோம்” என தெரிவித்தார்.

கொரோனா பரவலும் அமெரிக்காவின் கடனை அதிகரித்ததற்கு ஒரு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.

கடந்த மாதம் அதிபர் பைடன் கொரோனா பரவலை கட்டுப்படுத்தவும், நிவார நிதிக்காகவும், தடுப்பூசி விநியோகத்திற்காகவும் 1.9 டிரில்லியன் அமெரிக்க டாலரை விடுவித்துள்ளார்.

அமெரிக்காவின் தேசிய கடன் கடந்த 2000 ஆம் ஆண்டில் 5 லட்சம் கோடியாக இருந்தது. ஒபாமா நிர்வாகத்தின் போது தான் அமெரிக்க அரசின் கடன் மளமளவென்று உயர்ந்து இரட்டிப்பானதாக கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி, மொத்த உள்நாட்டு உற்பத்தியும் ஒபாமா ஆட்சிக்காலத்தில் மிகவும் சரிந்துள்ளது.

அமெரிக்காவின் கடன் 2050 க்குள் 104 டிரில்லியன் அமெரிக்க டாலராக உயரக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா ஆண்டுக்கு ஒரு நபர் மீது 10 ஆயிரம் அமெரிக்க டாலர் கடனாக வாங்கியுள்ளது.