அமெரிக்க நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு

parliament

அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த நவம்பர் மாதம் 3 ஆம் தேதி நடைபெற்றது. இதில் ஜனநாயகக் கட்சி வேட்பாளரான ஜோ பைடன் வெற்றி பெற்றார்.

துணை அதிபராக கமலாஹாரிஸ் தேர்வானார். இவர்கள் இருவரும் வரும் 20 ஆம் தேதி முறைப்படி பதவியேற்கவிருக்கின்றனர். அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன.

இதனிடையே பைடனின் வெற்றியை உறுதி செய்யும்பொருட்டு கடந்த 6 ஆம் தேதி தேர்தல் சபை தேர்வாளர்கள் அளித்த வாக்குகள் நாடாளுமன்றத்தில் எண்ணப்பட்டு, பைடனின் வெற்றியை அங்கீகரித்து சான்றிதழ் அளிக்கு நிகழ்வு நடந்தது.

அப்போது, நாடாளுமன்றத்தின் அருகே திரண்ட ட்ரம்ப் ஆதரவாளர்கள், நாடாளுமன்றத்துக்குள் நுழைய முயன்றனர்.

இதனால், ஏற்பட்ட கலவரத்தில் ஒரு பெண், ஒரு போலீஸ் அதிகாரி உள்ளிட்ட 6 பேர் உயிரிழந்தனர்.

Image result for us parliament security

உலகையே அதிரவைத்த இந்த நாடாளுமன்ற வன்முறைக்கு ட்விட்டரில் ட்ரம்ப் வன்முறையைத் தூண்டும் வகையில் பதிவிட்ட கருத்துகளே காரணம் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் தலைநகர் வாஷிங்டனில் தேசிய பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதாவது சுமார் 7 ஆயிரம் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக சுமார் 3,525 கோடி ரூபாய் செலவிடப்படவிருப்பதாக பாதுகாப்புத்துறை செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவித்தார்.

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிரான இரண்டாவது தகுதி நீக்க தீர்மானம் மீதான விசாரணை செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளதால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.