வேலைவாய்ப்பை உருவாக்கவும், வனத்தை பெருக்கவும் 855 மில்லியன் மரங்கள் வளர்க்க அமெரிக்கா திட்டம்!

Trees

கொரோனா தொற்றால் நிலைகுலைந்து போகியுள்ள அமெரிக்காவில் வேலைவாய்ப்பை உருவாக்கவும், வனத்தை பெருக்கவும் 855 மில்லியன் மரங்கள் வளர்க்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.

“கொரோனா வைரஸ்” உலகத்தையே அச்சத்தில் உறைய வைத்திருக்கும் வார்த்தை. இதன் பிறப்பிடம் சீனா என்றாலும் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகளில் நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது.

குறிப்பாக அமெரிக்காவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மக்களின் பழக்கவழக்கங்களை மாற்றியமைத்ததுடன் மிகப்பெரும் பொருளாதார சரிவை சந்தித்துள்ளன.

இதன் காரணமாக அமெரிக்காவில் நாளுக்குநாள் வேலை இழப்புகள் அதிகமாகி வருகின்றன.

Trees

இந்நிலையில் மரம் நட்டால் பணம் என்ற அறிவிப்பை அமெரிக்காவில் வெளியாகியுள்ளது. மனிதர்கள் எப்படி வேலை இல்லாமல் திண்டாடுகின்றனரோ அதே போன்று கோடை காலத்தில் அதிகரித்து வரும் வெப்ப அச்சுறுத்தலால் சுற்றுச்சூழல் திணறுகிறது.

இதிலிருந்து நாட்டை பாதுகாக்க மரங்கள் வளர்ப்பு அவசியமாகிறது. அதற்காக வரும் 2030 ம் ஆண்டிற்குள் உலகளவில் ஒரு டிரில்லியன் மரங்களை பாாதுகாக்க வேண்டி எடுக்கப்பட்ட முயற்சியை ஆதரிக்கும் வகையில் நாடு முழுவதும் 855 மில்லியன் மரங்கள் வளர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.

காடு வளர்க்கும் திட்டம் என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்தில் வேலையில்லாமல் தவிக்கும் இளைஞர்களும், குடும்ப உறுப்பினர்களும், தனி நபர்களும் பல்வேறு தன்னார்வ அமைப்புகள் ஈடுபடவுள்ளனர்.

இத்திட்டத்தின் மூலம் வரும் 2030ம் ஆண்டிற்குள் உலகளவில் காடுகளின் நிலையான மேலாண்மையால் 230 பில்லியன் டாலர் வணிக வாய்ப்புகளையும், உலகளவில் 16 மில்லியன் வேலைகளையும் உருவாக்கமுடியும்.

முன்னதாக சகாரா பாலைவனத்தை பசுமையாக்க அதனை சுற்றி பசுமை சுவர் அமைக்கப்பட்டு மரங்கள் நடப்பட்டுவருகின்றன. இதேபோல் பாகிஸ்தானில் 10 பில்லியன் மரங்களை நடுவதற்கான திட்டத்தை மக்கள் கையில் கொடுத்துள்ளது.

இதையும் படிக்கலாமே: பிரேசிலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் அமெரிக்க இந்திய மருத்துவர்!

அமெரிக்க செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

FB Page
http://- https://www.facebook.com/tamilmicsetusa

FB Group
– https://www.facebook.com/groups/usatamilnews/

Twitter
https://twitter.com/tamilmicsetusa