நியூயார்க்கில் அமெரிக்கவாழ் இந்தியருக்கு நேர்ந்த கொடுமை! காவலர்களின் வெறிச்செயல்

கடந்த மே 25 ஆம் தேதி அமெரிக்காவில் கருப்பின இளைஞர் ஜார்ஜ் ஃபிளாய்ட் காவலர்களால் கொல்லப்பட்டதை கண்டித்து அங்கு போராட்டங்கள் நடைபெற்றன. அப்போது காவலர்கள் கருப்பினத்தவர்களிடம் கொடூரமாக நடந்துகொள்வதாகவும், இனவெறி மற்றும் மதவெறியை வெளிகாட்டுவதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. கொரோனா அச்சுறுத்தலுக்கு நடுவில் கிட்டத்தட்ட ஒரு மாதமாக நடைபெற்ற பிளாக் லைவ் மேட்டர்ஸ் போராட்டத்தால் அமெரிக்காவே ஸ்தம்பித்தது.

Protest

இந்நிலையில் ஜார்ஜ் பிளெய்ட்க்கு நடந்தது போன்றே, நியூயார்க் நகரைச் சேர்ந்த அமெரிக்க வாழ் இந்தியர் ஒருவருக்கும் காவலர்களால் அநீதி நடந்தேறியுள்ளது. யோகேஷ்வர் கெயிந்தர் பெர்சவுத் என்ற இந்திய வம்சாவளியை அமெரிக்காவை சேர்ந்த காவலர்கள் கைது செய்ய முயன்றுள்ளனர். அப்போது யோகேஷ்வரரின் கழுத்தில் காவலர்கள் முழங்காலினை வைத்து அழுத்துவது போன்ற வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அவரை கைது செய்த காவல்துறையினர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அதிர்ஷ்டவசமாக யோகேஷ்வர் உயிர் பிழைத்துவிட்டார். இதுபோன்ற கொடூரமான கைது நடவடிக்கையில் ஈடுபடும் அமெரிக்க காவலர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து செனெக்டடே தலைமை காவல் நிலையம் முன் ஏராளமான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.