சர்ச்சில் பாதிரியாரிடம் ஆசி பெற்ற ட்ரம்ப்!

Donald Trump

அமெரிக்க அதிபர் பதவிக்கு வருகிற நவம்பர் மாதம் 3 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் ட்ரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடனும் போட்டியிடுகிறார்.

கொரோனா பரவலுக்கு மத்தியிலும் பல மாகாணங்களில் அதிபர் ட்ரம்ப், ட்ரம்பும், ஜோ பிடனும் போட்டிப்போட்டு கொண்டு வாக்குகளை சேகரித்துவருகின்றனர்.

அமெரிக்க அதிபர் தேர்தலில், இந்திய வம்சாவளி வாக்காளர்களின் ஓட்டு, பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.

இதனிடையே ஜோ பிடனுக்கே மக்கள் ஆதரவு அதிகமாக இருப்பதாக கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

ஆனால் அமெரிக்காவை சிறப்பாக நிர்வகிக்கும் திறமை என்னிடமே உள்ளது என்றும், தேர்தலில் தோற்றால் நாட்டைவிட்டே வெளியேறுவேன் என்றும் அதிபர் ட்ரம்ப் கூறிவருகிறார்.

trump

இந்நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நெவாடா மாகாணத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த போது சர்ச் ஒன்றிற்கு சென்று அங்கிருந்த பாதிரியாரிடம் ஆசி பெற்றார். அப்போது ட்ரம்ப் சர்ச் நிர்வாகத்திற்கு நன்கொடையாக சிறிது பணத்தையும் வழங்கினார். மத நம்பிக்கைகள் அதிகம் இல்லாத ட்ரம்ப் சர்ச்சுக்கு சென்று வழிபடுவது அரிதிலும் அரிது என கூறப்படுகிறது. இந்நிலையில் தேர்தலை ஒட்டி அவர் லாஸ் வேகாசில் உள்ள சர்ச்சுக்கு சென்றுள்ளார். ஆனால் தேர்தல் நேரத்தில் அவர் எவ்வாறு சர்ச் நிர்வாகத்திற்கு பணம் வழங்கலாம் என பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பிவருகின்றனர். இதற்கிடையில் நெவாடா மாகாணத்தில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவும் நடைபெற்றது. கொளுத்தும் வெயிலில் ஏராளமானோர் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். அமெரிக்காவில் வரும் 3ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருந்தாலும் கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு முன் கூட்டியே வாக்குப்பதிவு நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்கலாமே:  சத்குருவுடன் ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் சந்திப்பு!

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter