இந்தியாவில் ட்ரம்புக்கு சிலை வைத்து கடவுளாக வணங்கியவர் உயிரிழப்பு!

bussa krishna

தெலங்கானா மாநிலம் ஜனகனை பகுதியை சேர்ந்தவர் புசா கிருஷ்ணா. அவர் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் தீவிர ரசிகர். டிரம்புக்காக உயிரை கொடுக்க அளவுக்கு தீவிர ரசிகரான புசா கிருஷ்ணா கடந்த பிப்ரவரி மாதம் தனது வீட்டு அருகில் 6 அடி உயரத்தில் டிரம்ப் சிலையை நிறுவினார். மேலும் அந்த சிலைக்கு தினமும் பூஜை செய்து வந்தார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம் நாட்டுக்கு வருகை தந்தது மத்திய அரசை காட்டிலும் கிருஷ்ணாவுக்குதான் அதிக மகிழ்ச்சி.

bussa krishna

அமெரிக்க அதிபரை விரைவில் நான் சந்திப்பேன் என்றும், என்னுடைய கடவுள் அதிபர் ட்ரம்பு தான் என்றும் புசா தெரிவித்திருந்தார். தீவிரவாதத்துக்கு எதிராக ட்ரம்ப் செயல்படுவதால் அவர் எனக்கு கடவுள் என்றும் புசா தெரிவித்தார். புசா கிருஷ்ணாவை அவரது கிராமத்தினர் டிரம்ப் கிருஷ்ணா என்றும், அவர் வீட்டை டிரம்ப் ஹவுஸ் என்றும் அழைத்துவந்தனர்.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு சிலை வைத்து வணங்கிய தெலங்கா மாநிலத்தை சேர்ந்த புசா கிருஷ்ணா இன்று மாரடைப்பால் காலமானார். ஒவ்வொரு ஆண்டும் ட்ரம்பின் பிறந்தநாளின்போது அவருக்கு மாலை அணவித்து பூஜைகள் செய்து விமர்சையாக கொண்டாடுவார். ட்ரம்பின் இந்திய வருகையின்போதும் புதிய பேனர் அச்சடித்த புசா, திருவிழா போலக் கொண்டாடினர். இந்நிலையில் புசாவின் மறைவு அக்கிராமத்தில் அனைவருக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் வைத்த ட்ரம்ப் சிலை மட்டும் இன்னும் அவரது வீட்டிலேயே இருக்கிறது. ஆனால் அதனை வைத்த புசா இன்று மறைந்துள்ளார்.

இதையும் படிக்கலாமே: மீண்டும் பொதுப்பணிகளில் ஈடுபட ட்ரம்ப் தயார்- மருத்துவர்கள்

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter

Related posts