அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள குவாட் மாநாடு

Joe Biden

இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய 4 நாடுகள் இடம்பெற்றுள்ள குவாட் அமைப்பின் மாநாடு வரும் அக்டோபர் மாதம் வாஷிங்டனில் நடைபெற உள்ளது.

வெள்ளை மாளிகையின் இந்தோ பசுபிக் விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பாளர் குர்ட் கேம்பல் இதனை தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம் காணாலி முறையில் குவாட் மாநாடு நடைபெற்ற நிலையில், அக்டோபரில் நடக்கும் மாநாட்டில் நேரடியாக 4 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல், இந்தோ பசுபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்துவது, தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்துவது, பொருளாதார ஒத்துழைப்பு, சுகாதார கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா அடங்கிய குவாட் எனப்படும் கூட்டமைப்பு 2017 இல் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் இந்த கூட்டமைப்பு போர் பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளது.

பல்வேறு துறைகளிலும் இந்த நாடுகள் இணைந்து செயலாற்றி வருகின்றன என்பது குறிப்பிடதக்கது.