அமெரிக்க அதிபர் தேர்தல் வெற்றியை தீர்மானிக்கும் ‘சூப்பர் ஸ்டார் மாகாணங்கள்’

Trump

அமெரிக்கா அதிபர் தேர்தலை பொறுத்தவரை ஜோ பிடனுக்கு ஆதரவு பெருகி இருப்பதாக கருத்து கணிப்புகள் வெளிவந்தாலும் குறிப்பிட்ட சில மாகாணங்கள் தான் வெற்றியை தீர்மானிக்க போகின்றன.

அமெரிக்கா அதிபர் தேர்தல் நடைமுறை சற்று வித்தியாசமானது. தேசிய அளவில் மக்களின் பெரும்பான்மை வாக்குகளை பெற்றுவிட்டால் அவர் அதிபராகிவிட முடியாது.. 2016ஆம் ஆண்டு தேர்தலில் இது தான் நடந்தது.

தேசிய அளவில் ஹிலாரி கிளிண்டன் பெரும்பான்மை வாக்குகளை பெற்றாலும், எலக்டோரல் காலேஜ் எனப்படும் தேர்வாளர்களின் வாக்குகளை அதிகம் பெற்று அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார் ட்ரம்ப்.

அமெரிக்கா மக்கள் தேர்தல் நாளன்று, நேரடியாக வேட்பாளர்களுக்கு வாக்களிப்பதில்லை. மாறாக வேட்பாளர்களை தேர்வு செய்ய போகும் எலெக்டர்கள் அதாவது தேர்வாளர்களையே தேர்ந்தெடுக்கின்றனர்.

அமெரிக்காவில் ஒவ்வொரு மாநிலத்திலும் மக்கள் தொகை உள்ளிட்டவற்றை கணக்கில் கொண்டு , எலக்டர்கள் எண்ணிக்கை நிர்ணயிக்கப்படுகிறது. மொத்தமுள்ள 50 மாநிலங்களிலும் சேர்த்து 538 தேர்வாளர்கள் உள்ளனர்.

இவர்களில் 270 தேர்வாளர்களின் வாக்குகளை பெறும் வேட்பாளரே அதிபர் இருக்கையில் அமர முடியும்.

We're Letting You Mess With Our Presidential Forecast, But Try Not To Make The Map Too Weird | FiveThirtyEight

இதன்படி அமெரிக்காவில் அதிக தேர்வாளர்களை கொண்ட மாநிலம் கலிபோர்னியா. இங்கு மட்டும் 55 தேர்வாளர்கள் உள்ளனர். அடுத்ததாக டெக்சாஸில் 38 தேர்வாளர்களும் நியூயார்க் மற்றும் ஃபுளோரிடாவில் தலா 29 தேர்வாளர்களும் உள்ளனர். ஒரு மாநிலத்தில் மக்கள் வாக்கில் பெரும்பான்மை சதவிகிதத்தை எந்த வேட்பாளர் பெறுகிறாரோ அங்குள்ள அனைத்து தேர்வாளர்களின் வாக்குகளுமே அந்த வேட்பாளருக்கே சென்றுவிடும்.
2016ஆம் ஆண்டு தேர்தலை பொறுத்தவரை ட்ரம்ப் வெற்றிபெற உதவிய மாநிலங்கள் ஃபுளோரிடா, பென்சில்வேனியா, மிச்சிகன், வட கரோலினா, விஸ்கான்ஸின், அரிசோனா. பாரம்பரியமாக குறிப்பிட்ட கட்சிக்கே வாக்களிக்கும் மாநிலங்கள் என இருக்கும், ஆனால் ஒவ்வொரு தேர்தலிலும் மாற்று கட்சியை ஆதரிக்கும் மாநிலங்கள் தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கும் மாநிலங்களாக அறியப்படுகின்றன.

அந்த வகையில் இந்த ஆண்டு தேர்தலை பொறுத்தவரை , அரிசோனா, ஃபுளோரிடா, ஜார்ஜியா, மிச்சிகன், மின்னசோட்டா, வடக்கு கரோலினா, பென்சில்வேனியா, விஸ்கான்ஸின் ஆகிய் 8 மாநிலங்கள் முடிவை தீர்மானிக்கும் மாநிலங்களாக கருதப்படுகின்றன. எனவே வேட்பாளர்கள் இந்த மாநிலங்களை கைப்பற்றுவதிலேயே கவனம் செலுத்தி வருகின்றனர். ட்ரம்ப் 2016ஆம் ஆண்டு தேர்தலை போலவே இம்முறையும் இந்த மாநிலங்களை கைப்பற்றினால் மீண்டும் அதிபராவது உறுதி. ஜோ பைடன் இவற்றில் வென்றால் அவரே அடுத்த 4 ஆண்டுகளுக்கு அமெரிக்கா ஆள்பவராக இருப்பார்.

இதையும் படிக்கலாமே: அதிபர் தேர்தல்: அனல்பறக்க நடைபெற்ற இறுதி விவாதம்

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter