அமெரிக்காவில் பள்ளியில் துப்பாக்கி சூடு!

அமெரிக்காவில் உள்ள பள்ளி ஒன்றில் மாணவன் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஏராளமான மாணவர்கள் படுகாயமடைந்தனர்.

அர்கன்சாஸ் மாகாணத்தில் உள்ள பைன் பிளப் என்ற இடத்தில், ஒரு உயர்நிலை பள்ளி உள்ளது.

உணவு இடைவேளியின்போது பள்ளி மாணவர் ஒருவர் தன்னுடைய பையில் ஒளித்து வைத்திருந்த துப்பாக்கியால் அங்கிருக்கும் சக மாணவர்களையும், ஆசிரியர்களையும் சுட்டார். இதில், அம்மாணவனுடன் படிக்கும் 15 வயதான, சக மாணவன் படுகாயம் அடைந்தார்.

Teenager is in custody after a student is shot at a junior high school in Arkansas | Daily Mail Online

துப்பாக்கி சூடு நடத்திய மாணவர், பள்ளியில் இருந்து தப்பித்து ஓடினார்.

காயமடைந்த மாணவர், ஹெலிகாப்டர் உதவியுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால் உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர்.

துப்பாக்கி சூடு நடத்திய மாணவனை, அருகில் உள்ள பகுதியில் போலீசார் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

அவனிடம் எப்படி துப்பாக்கி வந்தது என்றும் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்துவருகின்றன.

பொதுமக்கள் கூடும் இடங்களான சூப்பர் மார்க்கெட், வழிபாட்டு தலங்கள், சுற்றுலா தலங்கள் என ஆங்காங்கே நடைபெற்றுவந்த துப்பாக்கிச்சூடு தற்போது  குழந்தைகள் கூடியிருக்கும் பள்ளியிலும் அரங்கேறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.