அமெரிக்காவில் டிக் டாக் செயலியை தடை செய்ய செனட் அவை ஒப்புதல்!

இந்திய எல்லையான லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த மாதம் 15 ஆம் தேதி இந்திய மற்றும் சீன படைவீரர்களின் இடையே திடீர் தாக்குதல் ஏற்பட்டது. அந்த மோதலில் இந்திய மற்றும் சீன ராணுவத்தில் பலர் படுகாயம் அடைந்த நிலையில், இந்திய ராணுவ வீரர்கள் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், சீனாவில் 35 வீரர்கள் உயிரிழந்ததாகவும் தகவல்கள் தெரிவித்தன. இரு நாடுகளுக்குமிடையேயான மோதலால் எல்லையில் பதற்றமான சூழல் அதிகரித்தைத்தொடர்ந்து, இரு நாட்டுப் படைகளும் தங்களது படைகளை விலக்கிக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டது. இதன் எதிரொலியாக டிக்டாக், ZOOM, SHARE IT, CLEANMASTER, XENDER, UC BROWSER, WE CHAT, HELO, CLASH OF KINGS , CLUB FACTORY உள்ளிட்ட 59 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. இதையடுத்து கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரிலிருந்து டிக் டாக் செயலி நீக்கப்பட்டது.

சீனாவின் 59 செயலிகளை இந்தியா தடை செய்ததையடுத்து அமெரிக்காவிலும் அந்த செயலிக்கு தடை விதிக்கப்படும் என வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ மற்றும் அதிபர் ட்ரம்ப் தெரிவித்திருந்தனர். பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை டிக்டாக் செயலி மூலம் சீனா திருடுவதாகவும் குற்றஞ்சாட்டிய அமெரிக்க செனட்டர்கள் டிக்டாக் செயலிக்கு தடை விதிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் அமெரிக்க மத்திய அரசு ஊழியர்கள், அரசு சாதனங்களில் டிக்டாக் செயலியை பயன்படுத்த தடை விதிக்கும் சட்டத்திற்கு செனட் குழு ஒப்புதல் அளித்துள்ளது. தொடர்ந்து செனட் சபையில் வாக்கெடுப்புக்கு நடத்தப்பட்டு இச்சட்டம் அமலுக்கு கொண்டு வரப்படும். டிக் டாக் செயலியை பயன்படுத்தும் 2.6 கோடி மக்களில் 60% பேர் அமெரிக்காவைச் சேர்ந்த இளைஞர்களே என அந்நிறுவனம் தெரிவித்திருந்தது குறிப்பிடதக்கது. ஏற்கனவே இந்திய பயனர்களை இழந்த டிக்டாக், அடுத்து அமெரிக்க பயனர்களையும் இழந்து விடுவோமோ என்ற அச்சத்தில் தனது நிறுவன தலைமையகத்தை அமெரிக்கா அல்லது லண்டனிற்கு மாற்ற பரிசீலித்துவருகிறது.

அமெரிக்கா செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

Facebook : https://www.facebook.com/tamilmicsetusa

Twitter : https://twitter.com/tamilmicsetusa