இந்தியா மீது அமெரிக்கா பொருளாதார தடையா?

S400

ரஷ்யாவிடம் இருந்து எஸ் – 400 ரக ஏவுகணைகளை வாங்கினால் இந்தியா மீது பொருளாதார தடை விதிக்கும் சூழல் உருவாகும் என அமெரிக்க நாடாளுமன்ற அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவிடம் இருந்து எஸ் – 400 ரக ஏவுகணைகளை வாங்குவதற்கு, இந்தியா கடந்த 2018 ஆம் ஆண்டு அக்டோபரில் ஒப்பந்தம் செய்தது.

தரையில் இருந்து விண்ணில் உள்ள இலக்கை தாக்கக் கூடிய இந்த ஏவுகணை அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்துக்கு அதிபர் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க நிர்வாகம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

US unhappy with India's S-400 air defence system deal with Russia, warns of this action

மேலும் அப்போதே இந்தியாவையும் மிரட்டியது.

அதாவது ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்தால், இந்த ஒப்பந்தத்தை மேற்கொள்ளக் கூடாது என அமெரிக்கா எச்சரித்தது.

ஆனால் அதையும் மீறி, கடந்த 2019 ஆம் ஆண்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்நிலையில், அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தகவல்களை அளிக்கும், பாராளுமன்ற ஆராய்ச்சி சேவை அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “ரஷ்யாவுடன் ஒப்பந்தம் செய்தால், இந்தியா மீது, அமெரிக்கா பொருளாதார தடை விதிக்கும் சூழ்நிலை உருவாகும்” எனக் குறிப்பிட்டுள்ளது. இந்த அறிக்கை குறித்து அரசு தரப்பில் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.