இந்திய கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்க போர் கப்பல்!

navvy

இந்திய கடற்பகுதிக்குள் சட்டவிரோதமாக அமெரிக்க போர்க் கப்பல் நுழைந்தது குறித்து அமெரிக்கா விளக்கம் கொடுத்துள்ளது.

கடந்த 7 ஆம் தேதி அமெரிக்க கடற்படையின் ஜான் பவுல் ஜோன்ஸ் என்ற போர்க்கப்பலானது அரபிக் கடலின், லட்சத்தீவுகளுக்கு மேற்கே 130 கடல் மைல் தொலைவில் பயிற்சி மேற்கொண்டது.

இந்த பயிற்சிக்கு இந்தியாவிடம் அமெரிக்கா முன் அனுமதி பெறவில்லை எனக் கூறப்படுகிறது.

பிரத்யேக பொருளாதார கடல் மண்டலத்திற்குள் அனுமதியின்றி, போர்க் கப்பல் வந்ததை கண்டித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிக்கை வெளியிட்டது. இதனால் அமெரிக்கா- இந்தியா இடையே பதற்றம் ஏற்பட்டது.

US note echoes 8 earlier ones but its no-consent clause for China, India

இதுகுறித்து விளக்கமளித்துள்ள அமெரிக்க ராணுவ தலைமையகம், “அமெரிக்க போர்க் கப்பல், பயிற்சியெல்லாம் நடத்தவில்லை, சர்வதேச கடல் சட்டத்தின்படி, வழக்கமான ரோந்து பணியிலேயே ஈடுபட்டது.

இதற்கு இந்தியாவிடம் முன் அனுமதி பெற தேவையில்லை.கடல் பகுதியில் ரோந்து பணி மேற்கொள்ள எங்களுக்கு உரிமை உள்ளது” எனக் கூறியுள்ளது.

இதனை ஏற்க மறுத்த இந்தியா, பொருளாதார கடல் மண்டலத்திற்குள் வந்தது தவறு என அதிரடியாக தெரிவித்துள்ளது. இதனால் இரு நாடுகளுக்கிடையே பதற்றமான சூழல் நிலவிவருகிறது.