குழந்தைகளுடன் சென்றவரை விரட்டிச் சென்று துப்பாக்கிச் சூடு

அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் மர்ம நபர், குழந்தைகளுடன் சென்ற ஒருவரை விரட்டிச் சென்று துப்பாக்கியால் சுடும் சிசிடிவி காட்சியை போலீசார் வெளியிட்டு உள்ளனர்.

அண்மைக்காலமாக அமெரிக்காவில் இனவெறி கொலைத் தாக்குதல்கள் தொடர்ந்து அரங்கேறி கொண்டிருக்கிறது. அமெரிக்காவில் கடந்த 10 ஆண்டுகளில் 43 ஆயிரம் பேர் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

இந்த ஆண்டில் மட்டுமே அமெரிக்காவில் 230 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடந்துள்ளன.

மார்ச் மாதம் 16ஆம் தேதி அட்லாண்டாவில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் ஆசிய வம்சாவளியினர் உட்பட 10 பேர் உயிரிழந்தனர்.

இந்த தாக்குதல் சம்பவம் நடந்த அடுத்த ஒருவாரத்தில் கொலொராவிலுள்ள பல்பொருள் அங்காடியில் துப்பாக்கிச்சூடு நடந்தது.

இதேபோல் கடந்த மாத தொடக்கத்தில் விர்ஜினியா கடற்கரையில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் படுகாயமடைந்தனர்.

கடந்த மாத இறுதியில் ஆரஞ்ச் நகரத்தில் உள்ள அலுவலக கட்டிடத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தொடர்ந்து கரோலினாவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

 

Chilling footage shows two children get caught up in New York shooting

இந்நிலையில் நியூயார்க் நகரில் மர்ம நபர், குழந்தைகளுடன் சென்ற ஒருவரை விரட்டிச் சென்று துப்பாக்கியால் சுடும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

சிசிடிவியில் பாதிவான காட்சியில் முகமூடி அணிந்த மர்ம நபர் 2 குழந்தைகளுடன் வந்த நபரை விரட்டிச் சென்று துப்பாக்கியால் சுடுகிறார்.

இதைக் கண்ட அப்பகுதி மக்கள் சிதறிய நிலையில் மர்ம நபர் விடாமல் மீண்டும் மீண்டும் சுடுவது போல் காட்சி வெளியாகி உள்ளது.

துப்பாக்கி குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் அவர் இறந்த நிலையில் சுடப்பட்டவர் குறித்து தீவிர விசாரணை நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளன