எந்த கட்சி வசம் எந்தெந்த மாநிலங்கள்?

அமெரிக்க அதிபர் தேர்தலில் சில குறிப்பிட்ட மாநிலங்கள் தங்களுக்கே உரித்தான கட்சிக்கே காலங்காலமாக வாக்களிப்பதாக சொல்லப்படுகிறது.

ராணுவம், பொருளாதார, தொழில்நுட்பம் ஆகிய அனைத்திலும் வல்லரசாக விளங்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளை உலகமே எதிர்பார்த்து காத்திருக்கிறது. அமெரிக்காவில் மொத்தம் 50 மாநிலங்கள் உள்ளன.

மொத்தமுள்ள 50 மாநிலங்களிலும் சேர்த்து 538 தேர்வாளர்கள் உள்ளனர். இவர்களில் 270 தேர்வாளர்களின் வாக்குகளை பெறும் வேட்பாளரே அதிபர் இருக்கையில் அமர முடியும்.

இந்நிலையில் சிவப்பு மாநிலங்கள் என அழைக்கப்படும் மாநிலங்கள் குடியரசுக்கட்சிக்கு சொந்தமானவை.

இந்த மாநிலங்களில் வசிக்கும் மக்கள் தொன்றுதொட்டு குடியரசுக்கட்சிக்கே தங்களது வாக்குகளை செலுத்துகின்றனர்.

இதில் அலாஸ்கா, கான்சாஸ், வட மற்றும் தெற்கு டகோட்டா, ஒக்லஹோமா, ஜார்ஜியா, டெக்சாஸ் உள்ளிட்ட 22 மாநிலங்கள் அடங்கும். இதேபோல் நீல மாநிலங்கள் ஜனநாயக்கட்சிக்கான மாநிலங்களாகும்.

கலிபோர்னியா, மேரிலாண்ட், இல்லினாய்ஸ், ஹவாய் உள்ளிட்ட 16 மாநிலங்கள் ஊதா மாநிலங்கள் பட்டியலில் உள்ளன.

இவை தவிர அதிபர் தேர்தல் வெற்றிக்கு வித்திடும் போர்க்கள மாநிலங்களாக கொலராடோ, புளோரிடா, மிச்சிகன், ஓஹியோ, பென்சில்வேனியா,அரிசோனா, வடக்கு கரோலினா, ஐயோவா உள்ளிட்ட பகுதிகள் உள்ளன.

அவை ஸ்விங்(Swing) மாநிலங்கள் என அழைக்கப்படுகின்றன. இந்த மாநில மக்களின் நிலைப்பாட்டை பொறுத்தே தேர்தல் வெற்றி அமையும்.

ஆனால் இந்த மாநிலங்களை சேர்ந்த மக்களின் மனநிலை அவ்வப்போது மாறிக்கொண்டே இருக்கும் என சொல்லப்படுகிறது.

சில நேரங்களில் ஜனநாயகக் கட்சிக்கும், சில நேரங்களில் குடியரசுக்கட்சிக்கும் இம்மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் தங்கள் ஆதரவை அளிப்பர்.

எனவே தான் போர்க்கள மாநிலங்கள் வெற்றியை தீர்மானிக்கும் மாநிலங்களாக பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்கலாமே:  கோமாளி போல் வேடமணிந்து கொரோனா மரணம் அறிவிப்பு!

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter