2024ஆம் ஆண்டு அதிபர் தேர்தலிலும் போட்டியிடுவேன் -ஜோ பைடன்

Biden

2024ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு, அதில் மீண்டும் வெற்றிபெற்று அமெரிக்க அதிபராவேன் என்ற நம்பிக்கை தனக்கு உள்ளதாக அதிபர் ஜோ பைடன் கூறினார்.

அமெரிக்காவில் நவம்பர் 3-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது.

இந்தத் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பாக டொனால்டு ட்ரம்ப்பும், ஜனநாயக் கட்சி சார்பாக ஜோ பைடனும் போட்டியிட்டனர்.

கருத்துக்கணிப்புகளின் முடிவுகளைப் போலவே ஜோ பைடன் முன்னிலை பெற்று வெற்றியை ஈட்டினார். தொடர்ந்து அதிபராகவும் பதவியேற்றார்.

kamala biden

அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றபின் முதன் முறையாக வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் பைடன், “நான் அமெரிக்க அதிபராக பதவி ஏற்ற பிறகு மக்களுக்காகவும், நாட்டின் நலனுக்காகவும் பல்வேறு திட்டங்களை அமல்படுத்தியுள்ளேன்.

2024ஆம் ஆண்டு நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவதே எனது இலக்கு. எனது எதிர்பார்ப்பும் அதுதான்.

இருப்பினும் விதியை நான் நம்புகிறேன். 2024 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் மீண்டும் வெற்றிப்பெற்று மீண்டும் அதிபராவேன்.

அதேபோல் கமலா ஹாரிஸ் 2-வது முறையாக அமெரிக்க துணை அதிபராவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது” எனக் கூறினார்.