குழந்தையுடன் பாலத்திலிருந்து குதித்த கொரோனா களப்பணியாளர்!

அமெரிக்காவில் 21 மாத குழந்தையுடன் பாலத்திலிருந்து குதித்து இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

டென்னசி மாகாணத்தின் மேடிசன் கவுண்டியில் 24 வயதான பெண் பெட்ரோல் நிலையம் ஒன்றின் மீது காரை மோத முயற்சிப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

ஆனால் அதற்குள் அந்த பெண் காரிலிருந்து இறங்கி தனது 21 மாத குழந்தையுடன் நடக்க தொடங்கினார். அருகிலிருந்த மேம்பாலம் ஒன்றை நோக்கி சென்ற அவர், திடிரென கீழே விழுந்தார். இதனை கண்ட அப்பகுதியிலிருந்தவர்கள் அதிர்ச்சியில் மூழ்கின்றனர்.

அந்த பெண்ணிம் பெயர் டோனிஷா லாஷே பார்கர் என்பது தெரியவந்தது. அவரது 21 மாத குழந்தையின் பெயர், ஜோனதான் ஜோன்ஸ் என்பதும் தெரியவந்துள்ளது.

திட்டமிட்டு தற்கொலை செய்துகொண்டதாக தெரிகிறது. டோனிஷாவின் மரணம் குறித்து விசாரித்த காவல்துறையினர், கொரோனா களப்பணியாளராக டோனிஷா பணியாற்றிவந்ததும், கடும் மன அழுத்தத்தில் இருந்ததாகவும் தெரியவந்துள்ளது. இந்த சமபவம் குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.

கடந்த சில நாட்களாகவே டோனிஷா மன அழுத்தத்தில் இருந்ததாக அவரது பாட்டி தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பவர்கள் ஓய்வில்லாமல் பணி செய்வதால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

அதுமட்டுமின்றி தினமும் ஏராளமான உயிர்கள் கொரோனாவால் உயிரிழப்பதை கண்டு அதிர்ச்சியடைகின்றனர். இதுவே அவர்கள் வாழ்க்கையை வெறுக்க காரணமாவதாக மனநல ஆலோசகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இதையும் படிக்கலாமே: அதிபர் பதவியை விடமாட்டேன்- ட்ரம்ப் பிடிவாதம்

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter