விமான பணிப்பெண்ணின் பல்லை உடைத்த பயணி!

Woman Punches

அமெரிக்காவில் விமானத்தில் பணிப்பெண் ஒருவரை பெண் பயணி தாக்கியதில் அவருக்கு பற்கள் உடைந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான்டியாகோ சர்வதேச விமான நிலையத்திற்கு சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் விமானம் சென்று கொண்டிருந்தது.

விமானம் தரையிறங்கும் நேரம் என்பதால் பணிப்பெண் ஒருவர் அனைவரையும் சீட் பெல்ட் அணியுமாறு கேட்டுக் கொண்டார்.

ஆனால் அதற்கு மறுப்புத் தெரிவித்த பெண் பயணி வியன்னா என்பவர் திடீரென விமானப் பணிப்பெண் முகத்தில் தாக்கினார். இதில் பணிப்பெண்ணின் சில பற்கள் தெறித்து விழுந்து, ரத்தம் கொட்டியது.

Brawl mid-air! Flight attendant punched in face, left with broken teeth,  video goes viral | viral News | Zee News

இதனைப் பார்த்த சக பயணிகள் விவயன்னாவை தடுத்து அமைதியாக இருக்கையில் அமரும்படி அறிவுறுத்தினர். மேலும் ஏன் விமானப் பணிப்பெண்ணை அடிக்கிறீர்கள் என கேள்வி எழுப்பினர். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையடுத்து அந்தப் பெண் பயணி வியன்னா மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீசாரும் அவரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர், வியன்னா மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.