அதிபர் ட்ரம்புக்கு விஷம் தடவிய கடிதம் அனுப்பிய பெண்!

trump

அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு விஷம் தடவிய கடிதம் அனுப்பபட்ட விவகாரத்தில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் மாதம் 3 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் ட்ரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடனும் போட்டியிடுகிறார். கொரோனா பரவலுக்கு மத்தியிலும் பல மாகாணங்களில் அதிபர் ட்ரம்ப், ட்ரம்பும், ஜோ பிடனும் போட்டிப்போட்டு கொண்டு வாக்குகளை சேகரித்துவருகின்றனர். அமெரிக்க அதிபர் தேர்தலில், இந்திய வம்சாவளி வாக்காளர்களின் ஓட்டு, பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறப்பட்ட நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் சீனா, ரஷியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் சீர்குலைக்க முயற்சிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

US presidential elections

இந்நிலையில் அதிபர் ட்ரம்ப்புக்கு வெள்ளை மாளிகை முகவரியில் ரைசின் என்ற விஷப்பொருள் தடவப்பட்ட கடிதம் வந்துள்ளது. வழக்கமான சோதனையின்போது கடிதத்தில் விஷம் தடவப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த கடிதம் வெள்ளை மாளிகைக்கு செல்வதற்கு முன்பே உளவுத்துறை அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டது. அந்த கடிதம் எங்கிருந்து வந்தது? யார் அனுப்பினார் என்பது குறித்து உளவுத்துறை விசாரணை நடத்தியது.

விசாரணையில் அந்த கடிதம் கனடாவிலிருந்து அனுப்பப்பட்டதாக தெரிய வந்துள்ளது. அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளதால், அதிபர் ட்ரம்பை குறி வைத்து கடிதம் அனுப்பப்பட்டதா என விசாரணை நடைபெற்றது. விசாரணையில் உளவுத்துறை கனடாவை சேர்ந்த பெண் ஒருவரே கடிதம் எழுதி அனுப்பியிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அந்த பெண் கைது செய்யப்பட்டார். அந்த பெண் எதற்காக விஷம் தடவிய கடிதத்தை அனுப்பினார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிக்கலாமே: அமைதி வழியை போதித்த காந்தியையும் திருடர்கள் விட்டுவைக்கவில்லை: ட்ரம்ப்

FB Page

– https://www.facebook.com/tamilmicsetusa

FB Group
– https://www.facebook.com/groups/usatamilnews/

Twitter
– https://twitter.com/tamilmicsetusa