ஆசியாவைச் சேர்ந்த மிகப்பெரிய ஆண் குளவி அமெரிக்காவில் கண்டுபிடிப்பு!

hornet

ஆசியாவைச் சேர்ந்த மிகப்பெரிய ஆண் குளவி அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.

பெரிய பெரிய பாலூட்டி விலங்குகளை விட சிறிதாக இருக்கும் பூச்சிகளுக்கு நுணுக்கமான சாதுரியங்கள் இருப்பது நம்மை வியப்பூட்டுகிறது. அதிலும் இந்தக் குளவிகளின் கொடுக்கில் கடுமையான விஷம் உள்ளது. ஆனால் அந்த கொடுக்கையே, அவை தற்காத்துக் கொள்ளும் பாதுகாப்பு வளையமாகக் கொண்டு செயல்படுகின்றன. இத்தகைய பூச்சிகள் மனிதனைக் கொட்டினால் தற்காலிக வலி அல்லது அசௌகரியம் முதல் சில வகை தீவிர ஒவ்வாமை போன்றவை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. குளவி கொட்டியவுடன், உடனடியாக அந்த கொடுக்கை உடலில் இருந்து நீக்கி விடவேண்டும். இல்லையேல் அடுத்த சில நொடிகளில் அந்த விஷம் உங்கள் உடலில் பரவ நேரிடும். அதன்பின் குளவி கொட்டிய இடத்தில் கிருமிநாசினி சோப் மற்றும் தண்ணீர் பயன்படுத்தி நன்றாகக் கழுவி விட்டு அண்டிசெப்டிக் மருந்து தடவலாம்.

wasp

இத்தகைய வீரியம் கொண்ட ஆசியாவின் மிகப்பெரிய குளவி கனடா எல்லையில் உள்ள வாட்காம் கவுன்ட்டி பகுதியில் பாட்டில் பொறியில் சிக்கியதாக வாஷிங்டன் மாகாண வேளாண்மைத் துறை (WSDA) தெரிவித்துள்ளது. கருமையும் மஞ்சள் நிறமும் கலந்த நிறமுடைய இந்தப் பெரிய வகை ஆசியக் குளவி, கொலைக்குளவி என்றழைக்கப்படுகின்றது. இது கொட்டினால் உயிரிழப்பு ஏற்படுவது உறுதி என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இந்தக்குளவி பொறியில் சிக்கும் என்று தாங்கள் எதிர்பார்க்கவில்லை என்று வாஷிங்டன் மாகாண வேளாண்மைத் துறை தெரிவித்துள்ளது. இந்த பெரிய ஆசியக் குளவியின் கூடுகளைத் தேடி வருவதாகக்கூறியுள்ள வேளாண்துறை, அதனைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கி உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்கலாமே‘புரளி’ என்ற வார்த்தையை அதிகமாக பயன்படுத்திய ட்ரம்ப்!

அமெரிக்க செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

Facebook- https://www.facebook.com/tamilmicsetusa
FB Group- https://www.facebook.com/groups/usatamilnews/
Twitter – https://twitter.com/tamilmicsetusa