ட்ரம்பின் யூடியூப் சேனலும் முடக்கம்!

youtube

பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராமை தொடர்ந்து அமெரிக்க அதிபர் ட்ரம்பின் யூடியூப் சேனலும் ஒரு வாரத்திற்கு முடக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த நவம்பர் மாதம் 3 ஆம் தேதி நடைபெற்றது. இதில் ஜனநாயகக் கட்சி வேட்பாளரான ஜோ பைடன் வெற்றி பெற்றார்.

துணை அதிபராக கமலாஹாரிஸ் தேர்வானார். இவர்கள் இருவரும் வரும் 20 ஆம் தேதி முறைப்படி பதவியேற்கவிருக்கின்றனர். அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன.

இதனிடையே பைடனின் வெற்றியை உறுதி செய்யும்பொருட்டு கடந்த 9 ஆம் தேதி தேர்தல் சபை தேர்வாளர்கள் அளித்த வாக்குகள் நாடாளுமன்றத்தில் எண்ணப்பட்டு, பைடனின் வெற்றியை அங்கீகரித்து சான்றிதழ் அளிக்கு நிகழ்வு நடந்தது.

அப்போது, நாடாளுமன்றத்தின் அருகே திரண்ட ட்ரம்ப் ஆதரவாளர்கள், நாடாளுமன்றத்துக்குள் நுழைய முயன்றனர்.

இதனால், ஏற்பட்ட கலவரத்தில் ஒரு பெண், ஒரு போலீஸ் அதிகாரி உள்ளிட்ட 5 பேர் உயிரிழந்தனர்.

உலகையே அதிரவைத்த இந்த நாடாளுமன்ற வன்முறைக்கு ட்விட்டரில் ட்ரம்ப் வன்முறையைத் தூண்டும் வகையில் பதிவிட்ட கருத்துகளே காரணம் எனக் கூறப்படுகிறது.

ட்ரம்ப்-ன் யூடியூப் சேனலும் முடக்கம்; விதிகளை மீறியதாக யூடியூப் நிறுவனம் அதிரடி!!

இதனால், அவரின் தனிப்பட்ட ட்விட்டர் கணக்கும், அதிபரின் அதிகாரப்பூர்வ கணக்கும் முடக்கப்பட்டது. இதேபோல் ட்ரம்பின் ஃபேஸ்புக், ட்விட்ச், ஸ்னாப் சாட் உள்ளிட்ட மற்ற சமூக ஊடகங்களும் முடக்கப்பட்டது.

இந்நிலையில் ட்ரம்ப் தனது அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலான donald j trump என்ற தளத்தில் சமீபத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டார். அது வன்முறையை தூண்டும் வகையிலும் கொள்கை விதிமுறைகளை மீறி இருப்பதாகவும் கூறி யூடியூப் நிறுவனம் அதனை நீக்கியது. அந்த வீடியோவின் தகவல்களை பகிரவும் யூடியூப் மறுத்துவிட்டது.

இதுகுறித்து யூடியூப் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “ட்ரம்பின் கணக்கை மதிப்பாய்வு செய்ததில் வன்முறையை தூண்டும் வகையிலான கருத்துக்கள் இருந்தன. இது எங்கள் கொள்கைகளை மீறி இருந்ததால் நடவடிக்கை எடுத்துள்ளோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்கலாமே: ட்ரம்ப்பை கடவுளாக நம்பும் க்யூஅனான் மக்கள்! யார் இவர்கள்?

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter