வெள்ளை மாளிகையின் மிக அதிகார மிக்க பதவிக்கு இந்திய- அமெரிக்க பெண் நியமனம்?

Neera Tanden

அமெரிக்காவில் நவம்பர் 3-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது.

இந்தத் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பாக டொனால்டு ட்ரம்ப்பும், ஜனநாயக் கட்சி சார்பாக ஜோ பைடனும் போட்டியிட்டனர்.

கருத்துக்கணிப்புகளின் முடிவுகளைப் போலவே ஜோ பைடன் முன்னிலை பெற்று வெற்றியை ஈட்டினார்.

ஒருவார இழுபறியாக இருந்தாலும் அதிபருக்கான மெஜாரிட்டியான 270 வாக்குகளை விட அதிகளவில் ஜோ பைடன் பெற்றார்.

ட்ரம்ப் செய்த சில மேல்முறையீடுகள் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டன.

306 வாக்குகளைப் பெற்று அதிபராக எந்தத் தடையும் இல்லாமல் பயணிக்கிறார் ஜோ பைடன். ஆனால், ட்ரம்ப் இன்னும் பிடிவாதமாக இருக்கிறார்.

Center for American Progress Action Fund president Neera Tanden speaks at an event on July 27, 2016.

பல்வேறு தரப்பினரின் அறிவுரைக்கு பின்னர் ஆட்சி அதிகாரத்தை பைடனிடம் வழங்க ட்ரம்ப் சம்மதித்துள்ளார்.அதனால், ஜோ பைடன் அமைத்த அதிகார பரிமாற்ற குழுக்கள் முழு வீச்சில் தங்கள் பணிகளைச் செய்து வருகின்றன. அவற்றில் 20 பேர் இந்திய வம்சாவளியினைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் வெள்ளை மாளிகையின் மிகவும் அதிகார மிக்க பதவியான பட்ஜெட் துறை தலைவராக இந்திய வம்சாவளியினரான நீரா தாண்டனுக்கு வழங்க அதிபர் ஜோ பைடன் முடிவு செய்துள்ளார். இந்த நியமனத்தற்கு செனட் சபை ஒப்புதல் அளித்தால், அந்த பதவிக்கு வரும் முதலாவது ஆசிய அமெரிக்க பெண்மணி என்ற பெருமையை நீரா பெறுவார். 50வயதான நீரா தற்போது அரசு கொள்கை அமைப்பின் தலைமை செயல் அதிகாரியாக இருக்கிறார். நிதியமைச்சராக ஜேனட் எல்லனை நியமிக்க உள்ள பைடன், அவருடன் சேர்ந்து பொருளாதார கொள்கைகளை வகுப்பதற்கான குழுவையும் அமைக்கவுள்ளார்.

இதையும் படிக்கலாமே: ஜோ பைடனுக்கு காலில் காயம்!

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter