இத மட்டும் ட்ரம்புக்கு வழங்கவே கூடாது- பைடன் அதிரடி உத்தரவு

Joe Biden

முன்னாள் அதிபர் என்ற வகையில் முக்கியமான உளவுத்துறை தொடர்பான தகவல்களை ட்ரம்புக்கு வழங்கக்கூடாது என அமெரிக்க அதிபர் பைடன் தெரிவித்துள்ளார்.

பொதுவாக அமெரிக்க அரசு நிர்வாகத்தில் மிக முக்கியமான உளவுத்துறை தகவல்களை முன்னாள் அதிபருக்கு தெரிவிக்கும் வழக்கம் இருக்கிறது.

ஆனால் தாறுமாறாக நடந்துகொள்ளும் ட்ரம்புக்கு அத்தகைய தகவல்கள் தேவையில்லை என தாம் நினைப்பதாகவும், முக்கிய உளவுத் தகவல்களை ட்ரம்பிடம் தெரிவித்தால் அது வெளியே கசிய வாய்ப்புள்ளதாகவும் பைடன் தெரிவித்துள்ளார்.

Joe biden-Trump

எந்த மதிப்பீட்டின் அடிப்படையில் உளவுத்துறை தகவல்களை ட்ரம்புக்கு தெரிவிப்பது என கேள்வி எழுப்பிய பைடன், அப்படியே தெரிவித்தாலும் ட்ரம்ப் அதனை கமெண்ட் அடிப்பார் எனவும், அவரால் வேறு எந்த பலனும் இல்லை என்றும் குறிப்பிட்டுளார்.

பைடன் ஏற்கனவே தேர்தலில் மோசடியில் ஈடுபட்டு ஆட்சியை பிடித்ததாக அதிபர் ட்ரம்ப் குற்றஞ்சாட்டிவருகிறார்.

மேலும் அதிபராக பைடன் பதவி ஏற்பதற்கு ஒரு சில நாட்களுக்கு முன் நாடாளுமன்றத்தில் நடந்த வன்முறைக்கும் ட்ரம்ப் தான் காரணம் என சொல்லப்படுகிறது.

இப்படி அமெரிக்காவின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் ட்ரம்புக்கு உளவுத்துறை தொடர்பான தகவல்களை தெரிவிக்க வேண்டாம் என பைடன் நினைப்பது சரியான விஷயமே என அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.