அமெரிக்காவில் கோடிகளில் புரண்டு கொடிக்கட்டி பறக்கும் 7 இந்தியர்கள்

Us indians

அமெரிக்க பெரும் பணக்காரர்கள் பட்டியலில் 7 இந்தியர்கள் இடம்பிடித்துள்ளனர்.

உலக அளவிலும் அமெரிக்க அளவிலும் பெரும் பணக்காரர்களுக்கான பட்டியலை ஃபோர்ப்ஸ் ஊடகம் ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், அமெரிக்காவின் பெரும் பணக்காரர்கள் 400 பேர் கொண்ட பட்டியலை தற்போது ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ளது. இதில் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் 13 லட்சத்து 17 ஆயிரம் கோடி சொத்து மதிப்புடன் முதலிடம் பிடித்துள்ளார். இதன் மூலம் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக ஜெஃப் பெசோஸ் முதலிடத்தில் நீடிக்கிறார்.

அடுத்ததாக மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட் 8 லட்சத்து 16 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து மதிப்பை தன் வசப்படுத்தி இரண்டாமிடத்தை பிடித்துள்ளார். அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்த பட்டியலில் 339 ஆவது இடத்தில் உள்ளார்.

Us indians

இந்நிலையில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் 7 பேர் இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளனர். Zscaler நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரியான ஜே சவுத்ரி 85 ஆவது இஅத்திலும், சிம்போனி டெக்னாலஜி நிறுவனர் ரமேஷ் வத்வானி 238 ஆவது இடத்திலும், Wayfair நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி நீரஜ் சிங் 299 ஆவது இடத்திலும் உள்ளனர். இதேபோல் இந்திய வம்சாவளிகளான கோஸ்லா வென்சர்ஸ் நிறுவனர் வொனோத் கோஸ்லா, ஷெர்பலோ வென்சர்ஸ் நிறுவனத்தின் மேனேஜிங் பார்ட்னர் கவிதார்க் ராம் ஸ்ரீராம், ராகேஷ் கங்வால், வொர்க்டே நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி அனீல் பூஸ்ரி ஆகிய ஏழு இந்தியர்கள் அமெரிக்க பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். மேலும் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க், பெர்க்‌ஷைர் ஜாதவே தலைமைச் செயலதிகாரி வாரென் பஃபெட், ஆரக்கிள் நிறுவனர் லேரி எலிசன் போன்ற பிரபலங்களும் இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.

இதையும் படிக்கலாமே: அமைதிக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்பின் பெயர் பரிந்துரை!

அமெரிக்க செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

FB Page
http://- https://www.facebook.com/tamilmicsetusa

FB Group
– https://www.facebook.com/groups/usatamilnews/

Twitter
https://twitter.com/tamilmicsetusa