பதவியிலிருந்து இறங்க அடம் பிடித்த ‘அதிபர் ட்ரம்ப்’… வைரலாகும் வீடியோ

President Show

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தேர்தல் முடிவுகளை ஏற்காமல் பிடிவாதமாக உள்ள நிலையில் இச்சூழலை பிரதிபலிக்கும் வகையில் 3 ஆண்டுகளுக்கு முன்பே நடந்த ஒரு நாடகத்தின் காட்சிகள் சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்துள்ளது.

பரபரப்புகளுக்கும் சர்ச்சைகளுக்கும் சொந்தக்காரர்.. தான் எது செய்தாலும் உலக கவனத்தை ஈர்த்துவிடுவார்.. உலகின் மிக உயரிய பொறுப்பில் இருந்தும் பொறுப்பற்றவர் என்ற பெயரை சம்பாதித்தவர் அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப்..

டொனால்ட் ட்ரம்ப், ரியல் எஸ்டேட் அதிபர் ஃபிரெட் ட்ரம்பின் நான்காவது மகன்.. ட்ரம்ப் சாம்ராஜ்ஜியத்தை உலகம் முழுவதும் உலகம் முழுவதும் விரிவுபடுத்தினார். மூன்று முறை திருமணம் செய்து கொண்டார்.

trump

2016ஆம் ஆண்டு அமெரிக்கா அதிபராக வெற்றி பெற்ற பின்பு பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார்.. குடியேற்றக் கொள்கையில் மாற்றம் கொண்டு வந்து, எல்லையில் அகதிகளையும் குழந்தைகளையும் பிரித்தார்.

குறிப்பிட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவினுள் நுழைய தடை விதித்தார். பருவநிலை மாற்ற மாறுபாடுகளை குறைப்பதற்கான சர்வதேச பாரீஸ் ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்காவை வெளியேற செய்தார்.

ஈரானுடனான சர்வதேச அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறினார். ஒரு பொத்தானை அழுத்தினால் அமெரிக்காவே அழிந்துவிடும் என எச்சரித்த வடகொரியா அதிப்ர் கிம் ஜாங் உன்னை நேரில் சந்தித்து நட்பு பாராட்டி வரலாற்றை மாற்றி அமைத்தார்.

தற்போது அதிபர் பதவிக்கான தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் பைடன் வெற்றியை நெருங்கிவரும் சூழலில், அதனை ஏற்க மறுக்கிறார் அதிபர் ட்ரம்ப்.

அதிபர் நாற்காலியை விட்டு அவர் இறங்குவாரா என்ற கேள்விகளும் எழுந்துள்ளது. இந்நிகழ்வை அமெரிக்காவில் நடந்த ஒரு காமெடி நிகழ்ச்சி கண்முன் நிறுத்துகிறது.

கடந்த 2017 ஆம் ஆண்டு ட்ரம்ப் போன்று வேடமணிந்த நகைச்சுவை நடிகர் டோனி (DONNY) மழலையர் பள்ளிக்கு சென்று அங்கிருக்கும் குழந்தைகளை மகிழ்விப்பார்.

அந்த வீடியோவில் வரும் ட்ரம்ப் பிடிவாதம் பிடிப்பது போன்ற காட்சிகள் தற்போதைய சூழலுக்கு ஒத்துப்போவதால் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டுவருகிறது.

இதையும் படிக்கலாமே: அதகளப்படும் அமெரிக்கா! ஒருபக்கம் கொண்டாட்டம், மறுபக்கம் போராட்டம்

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter