தோல்வி பயம்? வாக்கு எண்ணிக்கையை நிறுத்த ட்ரம்ப் திட்டம்

Donald Trump

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவில் தாமதம் ஏற்படுவதையடுத்து அதில், மோசடி நடப்பதாக ட்ரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தேர்தல் வெற்றியை பைடன் கட்சியினர் திருட முயற்சிப்பதாக ட்ரம்ப் பதிவிட்டதற்கு ட்விட்டர் நிறுவனம் ஆட்சேபம் தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியாகி கொண்டிருக்கும் சூழலில் ட்ரம்ப், தனது ட்விட்டர் பக்கத்தில், தாமே தேர்தலில் வெற்றி பெருவேன் என்றும், மக்களிடம் விரைவில் உரையாற்றுவேன் என்றும் பதிவிட்டிருந்தார். மேலும் தேர்தல் முடிவுகளை ஜனநாயகக் கட்சியினர் திருட முயற்சிப்பதாகவும் குற்றஞ்சாட்டியிருந்தார். ட்ரம்பின் இந்த பதிவு தேர்தல் முடிவுகளில் குழப்பத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக கூறியுள்ள ட்விட்டர் நிறுவனம், இது தவறான முறையில் வழிநடத்தும் பதிவு என சுட்டிக்காட்டியுள்ளது.

trump
மிச்சிகன், பென்சில்வேனியா, விஸ்கான்சின் ஆகிய மூன்று மாநிலங்களில் தேர்தல் முடிவு வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த 3 மாநிலங்களில் உள்ள 46 வாக்குகள் வெற்றியை முடிவு செய்யும் என்பதால் இந்த முடிவுகள் மிகவும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. இதனை சுட்டிக்காட்டி பேசிய அதிபர் ட்ரம்ப், வாக்கு எண்ணிக்கையில் மோசடி நடந்திருப்பதாகவும் நீதிமன்றத்தை நாட உள்ளதாகவும் கூறினார். முடிவுகள் அறிவிக்கப்பட வேண்டிய மாநிலங்களில் அதாவது இண்டியானா, டென்னசி, கென்டக்கி, அர்கான்சிஸ், மிசோரி உள்ளிட்ட மாநிலங்களில் அதிபர் ட்ரம்ப்பே வெற்றிப்பெற்று உள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 213 தேர்தல் சபை வாக்குகளை பெற்றுள்ளார். ஜோ பிடன் 224 தேர்தல் சபை வாக்குகளை பெற்றுள்ளார். அதிபர் தேர்தலில் வெற்றி பெற 270 தேர்தல் சபை வாக்குகளை பெறவேண்டும் என்பது குறிப்பிடதக்கது.

இதையும் படிக்கலாமே:  3 மாநிலங்களில் தேர்தல் முடிவுகள் வெளியாக தாமதமாகும் என தகவல்

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

 

Twitter