ட்ரம்ப்- பைடன் ஆதரவாளர்களிடையே ஏற்பட்ட மோதலில் கத்திக்குத்தி!

Protest

அமெரிக்காவின் ஜார்ஜியா அட்லாண்டா உள்ளிட்ட மாகாணங்களில் அதிபர் ட்ரம்ப் ஆதரவாளர்கள் நடத்திய பேரணியில் வன்முறை வெடித்தது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஜோ பைடனும், துணை அதிபர் பதவிக்கு போட்டியிட்ட இந்திய வம்சாவளி கமலா ஹாரிஸூம் வெற்றிப்பெற்றனர். 270 தேர்வாளர்களின் வாக்குகளை பெற்றால் வெற்றி என்ற நிலையில், ஜோ பைடன் 306 பிரதிநிதிகள் வாக்குகளைப் பெற்றதையடுத்து, வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

அதிபர் ட்ரம்ப் 214 தேர்தல் வாக்குகளை மட்டுமே பெற்று தோல்வியை தழுவினார். ஆனால் தேர்தல் தோல்வியை ஒப்புக்கொள்ளாத அதிபர் ட்ரம்ப், தேர்தலில் மோசடி நடத்திருப்பதாக ஆதாரமே இல்லாமல் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார்.

இது தொடர்பான சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அவர் தெரிவித்தாலும், வாக்கு எண்ணிக்கையில் குளறுபடிகள் நடக்கவில்லை என்று கூறி ட்ரம்ப் தரப்பில் தொடரப்பட்ட வழக்குகளை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

4 Stabbed In Clashes As Trump Supporters Protest To Back Poll Fraud Claim

ஆனால் இதனை ஏற்க மறுக்காத ட்ரம்ப் ஆதரவாளர்கள் ட்ரம்ப்பிடமிருந்து தேர்தல் வெற்றி பறிக்கப்பட்டதாக கூறி ஜார்ஜியா, வாஷிங்டன் உள்ளிட்ட பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ட்ரம்ப் ஆதரவாளர்களுக்கு எதிராக பைடன் ஆதரவாளர்களும் போராட்ட களத்தில் குதித்ததால் சாலையில் மோதல் வெடித்தது. இதில் நான்கு பேருக்கு கத்திக்குத்து ஏற்பட்டது.

தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த காவல்துறையினர் மிளகுப்பொடியை தூவியும், துப்பாக்கிச் சூடு நடத்தியும் போராட்டக்காரர்களை கலைத்தனர். இதனால் முக்கிய நகரங்களில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிக்கலாமே: பயன்பாட்டுக்கு வந்தது கொரோனா தடுப்பூசி

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter