இனி மாஸ்க் அணிய தேவையில்லை- பைடன்

Joe biden

“கொரோனா வைரஸ்” உலகத்தையே அச்சத்தில் உறைய வைத்திருக்கும் வார்த்தை. இதன் பிறப்பிடம் சீனா என்றாலும் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகளில் நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது.

குறிப்பாக அமெரிக்காவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மக்களின் பழக்கவழக்கங்களை மாற்றி, மாஸ்க் அணிந்து, சமூக இடைவெளியுடன் பயணிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.

அமெரிக்காவில் கடந்த டிசம்பர் மாதம் 14 ஆம் தேதி முதல் அமெரிக்காவில் பைசர், நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பைடன், மைக் பென்ஸ் உள்ளிட்டோர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.

இதன்மூலம் மக்களுக்கு தடுப்பூசி மீதான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. முன்களப்பணியாளர்கள் மட்டுமின்றி அதிகாரிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டனர்.

தொடர்ந்து மாடர்னா நிறுவனத்தின் தடுப்பூசிக்கு அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புத்துறை அனுமதி அளித்தது.

இதனையடுத்து ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் ஒரு டோஸ் தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டுக்கு பயன்படுத்தவும் அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.

அமெரிக்காவில் 39 சதவீத மக்கள் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை பெற்றுள்ளனர்.

vaccine

இந்நிலையில் கொரோனா தடுப்பூசிகளின் இரண்டு டோஸ்களையும் போட்டுக் கொண்டவர்கள், இனி மாஸ் அணியத் தேவையில்லை என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “கொரோனா வைரஸ்க்கு எதிராக நாம் மேற்கொண்ட சிறப்பான நடவடிக்கைகளால் தற்போது மிகப்பெரிய அறிவிப்பை அறிவிக்கவுள்ளேன்.

இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்டவர்கள் பொதுவெளியில் செல்லும்போது மாஸ்க் அணிய தேவையில்லை. தடுப்பூசிகள் உங்கள் உயிரைக் காப்பற்றுவதுடன்,

உங்களைச் சுற்றியுள்ளவர்களைக் காப்பாற்றுகிறது. இனி உங்கள் இயல்பான வாழ்க்கையை வாழ வகைச்செல்ல தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.