பொய் சொன்ன ட்ரம்ப்பை தண்டித்த அமெரிக்க ஊடகங்கள்

Trump

சட்டப்படி வாக்குகள் எண்ணப்பட்டால் எளிதாக வெற்றிப்பெறுவேன் என அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

உலகமே எதிர்நோக்கிய அமெரிக்க அதிபருக்கான தேர்தல் கடந்த 3 ஆம் தேதி நடைபெற்றது.

இதுவரை அறிவிக்கப்பட்ட முடிவுகளின்படி ஜனநாயக கட்சி வேட்பாளர் பைடன் 264 தேர்வாளர்களின் வாக்குகளையும், அதிபர் ட்ரம்ப் 214 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

பெரும்பான்மைக்கு மேலும் 6 தேர்வாளர்களின் வாக்குகளை மட்டுமே பைடன் பெற வேண்டியுள்ளது.

அலாஸ்கா, ஜார்ஜியா, நெவாடா , வட கரோலினா மற்றும் பென்சில்வேனியா ஆகிய ஐந்து மாநிலங்களில் வாக்குகள் எண்ணப்பட்டுவருகின்றன.

இந்நிலையில் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அதிபர் ட்ரம்ப், சட்டப்படி வாக்குகள் எண்ணப்பட்டால் தன்னால் எளிதாக வெற்றியடைய முடியும் என்றும், சட்ட விரோதமாக வாக்குகள் எண்ணப்பட்டுவருவதால் தேர்தலை அவர்கள் தம்மிடமிருந்து திருடிச்செல்லும் நிலை ஏற்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

Donald Trump

பல மாநிலங்களில் வரலாற்றில் இல்லாத அளவுக்கு வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளதாக தெரிவித்த ட்ரம்ப், அமெரிக்க அதிபர் தேர்தல் தபால் வாக்குகலில் மோசடி நடந்து வருவதாக மீண்டும் குற்றஞ்சாட்டினார்.

தான் வெற்றிப்பெற வேண்டிய பல இடங்களில் வாக்கு எண்ணிக்கை மாற்றப்பட்டுவிட்டதாகவும் அதிபர் ட்ரம்ப் குற்றஞ்சாட்டினார்.

ஜனநாயக கட்சியினர் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பல இடங்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாகவும் குடியரசு கட்சியினர் வாக்கு எண்ணிக்கையை பார்வையிட பல இடங்களில் அனுமதி வழங்கப்படவில்லை என்றும் ட்ரம்ப் தெரிவித்தார். தேர்தல் மற்றும் வாக்கு எண்ணிக்கையில் மோசடி நடந்துள்ளதாக தெரிவித்த ட்ரம்ப், சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

இவ்வாறாக தேர்தல் தொடர்பாக அதிபர் டிரம்ப் உரையாற்றிக்கொண்டிருக்கும்போது, அவர் பொய் கூறுவதாக கூறி, பல்வேறு அமெரிக்க ஊடகங்கள் நேரலை ஒளிபரப்பை திடீரென நிறுத்தின.

இதையும் படிக்கலாமே:  5 மாநிலங்களில் ட்ரம்ப் மற்றும் ஜோ பைடன் இடையே இழுபறி!

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

 

Twitter