2024 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவேன் – ட்ரம்ப்

அமெரிக்காவில் நவம்பர் 3-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது.

இந்தத் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பாக டொனால்டு ட்ரம்ப்பும், ஜனநாயக் கட்சி சார்பாக ஜோ பைடனும் போட்டியிட்டனர்.

கருத்துக்கணிப்புகளின் முடிவுகளைப் போலவே ஜோ பைடன் முன்னிலை பெற்று வெற்றியை ஈட்டினார்.

ஒருவார இழுபறியாக இருந்தாலும் அதிபருக்கான மெஜாரிட்டியான 270 வாக்குகளை விட அதிகளவில் ஜோ பைடன் பெற்றார்.

ட்ரம்ப் செய்த சில மேல்முறையீடுகள் நீதிமன்றத்தால் தள்ளுப்படி செய்யப்பட்டன.

306 வாக்குகளைப் பெற்று அதிபராக எந்தத் தடையும் இல்லாமல் பயணிக்கிறார் ஜோ பைடன். ஆனால், ட்ரம்ப் இன்னும் பிடிவாதமாக இருக்கிறார்.

பைடன் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக ஒருபுறம் நடைபெற்றுவரும் நிலையில் அதிபர் ட்ரம்ப், வெள்ளைமாளிகையில் கொண்டாடும் கடைசி கிறிஸ்துமஸ் இது என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெள்ளை மாளிகையில் விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. கிறிஸ்துமஸ் கொண்டாட்ட விழாவில் ட்ரம்பின் குடியரசு கட்சி உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர். அவர்களிடம் பேசிய அதிபர் ட்ரம்ப், “தனது 4 ஆண்டு பதவிக்காலம் சிறப்பாக அமைந்தது.

அடுத்த 4 ஆண்டுகளுக்கு பதவியில் இருக்க முயற்சித்து வருகிறேன். ஒருவேளை முடியாவிட்டால், அடுத்த 4 ஆண்டுகளுக்கு பின் உங்களை சந்திப்பேன்.

அதாவது 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவேன் என அதிபர் ட்ரம்ப் சூசனமாக தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்கலாமே: ஹெச்1பி விசாக்கள் மீதான கட்டுப்பாடுகளை நீக்கியது அமெரிக்க நீதிமன்றம்

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter