கொரோனா நிவாரணத்தில் முறைகேடு: மைக்ரோசாப்ட் முன்னாள் நிர்வாகி கைது!

அமெரிக்காவில் அரசால் வழங்கப்படும் சிறு தொழில் செய்வோருக்கான கடன் வழங்கும் திட்டத்தில் முறைக்கேடு செய்ததாக மைக்ரோசாப்ட் முன்னாள் நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்குதலால் நிலைகுலைந்துள்ள அமெரிக்காவில், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க 100 பில்லியன் டாலர் நிதியை அந்நாட்டு அரசு ஒதுக்கியுள்ளது. இலவச கொரோனா வைரஸ் பரிசோதனை, உடல்நலக்குறைவால் விடுமுறை எடுத்துக்கொண்டவர்களுக்கு நிதி உதவி உள்ளிட்ட ஏராளாமான நிவாரண உதவிகள் இதில் அடங்கும் என தெரிவிக்கபப்ட்டுள்ளது. குறிப்பாக சிறு தொழில் செய்வோர்கள் கொரோனா நெருக்கடியால் ஏற்பட்ட நஷ்டத்திலிருந்து மீண்டுவர அவர்களுக்கு கடன் அளிக்கப்படுகிறது. அதற்காக அதிபர் ட்ரம்ப் தலைமையிலான அரசு 300 பில்லியன் டாலர் நிதியை ஒதுக்கியுள்ளது.

jail--prison

இந்நிலையில் முன்னாள் மைக்ரோசாப்ட் நிர்வாகியான முகுந்த் மோகன், ஆறு நிறுவனங்களின் பெயர்களில், கடன் பெற விண்ணப்பித்துள்ளார். இதன்மூலம் அவர் 41 கோடி ரூபாய் பணத்தை, தன் தனிப்பட்ட வங்கிக் கணக்கிற்கு பரிமாற்றம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் அவர் மீது பண மோசடி மற்றும் சிறு தொழில் செய்வோர்களுக்கு வழங்கும் அரசின் திட்டத்தை தவறாக பயன்படுத்தியது உள்ளிட்ட புகார் எழுந்ததையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

அமெரிக்கா செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…
Facebook : https://www.facebook.com/tamilmicsetusa
Twitter : https://twitter.com/tamilmicsetusa