ட்ரம்பை பழிவாங்கிய ஃபைசர் நிறுவனம்

pfizer vaccine

அமெரிக்கா அதிபர் தேர்தலில் ட்ரம்ப் தோல்வி அடைந்ததற்கு கொரோனா பெருந்தொற்றும் அதனை அவர் கையாண்ட விதமும் முக்கிய காரணமாக அமைந்துவிட்டது.

நவம்பர் 3ஆம் தேதி அதிபர் தேர்தல் நடப்பதற்கு முன்னதாகவே கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்துவிடும் என டொனால்ட் ட்ரம்ப் தனது பரப்புரை கூட்டங்களில் அறிவித்திருந்தார்.

ஆனால் தேர்தல் முடிவடைந்து நவம்பர் 9ஆம் தேதி தான் ஃபைசர் நிறுவனம் தங்களின் கொரோனா தடுப்பு 95 சதவிகித பலனளிப்பதாக அறிவித்தது. அப்போதே, வேண்டுமென்றே ஃபைசர் நிறுவனம் தாமதமாக அறிவிப்பை வெளியிட்டதாக ட்ரம்ப் விமர்சித்திருந்தார்.

இந்த சூழலில் ஃபைசரின் கொரோனா தடுப்பு மருந்துக்கு அண்மையில் பிரிட்டன் , கனடா, பஹ்ரைன், சவுதி அரேபியா ஆகிய நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளன.

Pfizer/BioNTech vaccine starts working 10 days after first dose, says FDA |  Financial Times

அமெரிக்காவிலும் அனுமதி அளிக்கும் படி ஃபைசர் நிறுவனம் விண்ணப்பித்திருந்தது. இதற்கு FDA , அனுமதி அளிக்கும்படி ட்ரம்ப் நிர்வாகம் அழுத்தம் தந்துள்ளது.

FDAயின் தலைவர் ஸ்டீபன் ஹான்,ஃபைசருக்கு அவசர அனுமதி கொடுக்கவில்லை எனில் ராஜினாமா செய்ய வேண்டும் என ட்ரம்ப் நிர்வாகம் நிர்பந்தம், செய்ததாக தகவல் வெளியானது. அதிபர் ட்ரம்பும், FDA மக்கள் உயிருடன் விளையாடுவதை நிறுத்திவிட்டு உயிரை காக்க வேண்டும் என டிவிட் செய்திருந்தார்.

இதனிடையே தடுப்பூசி விவகாரத்தில் அரசியல் தலையீடு இல்லை என அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் உயிரை பறிக்கும் நோயிலும் அரசியலா என கவலையளிக்கிறது.

இதையும் படிக்கலாமே: நிலாவுக்கு செல்லும் அமெரிக்கவாழ் இந்தியர்!

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter