நான் மட்டும் தோற்றுவிட்டால் அமெரிக்காவை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது: ட்ரம்ப்

அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் அதிபர் ட்ரம்ப் மீண்டும் களம்காண்கிறார். ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் போட்டியிடுகிறார். அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு உச்சத்தில் இருந்தாலும் தேர்தலுக்கான பணிகள் நடைபெற்ற வண்ணமே இருக்கின்றன. ஆனால் ட்ரம்பின் செல்வாக்கு குறைந்து வருகிறது. தேர்தலில் அவர் வெல்வதற்கான வாய்ப்புகள் குறைவாகவே இருக்கின்றன என கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. இந்த சூழலில் மக்கள் முறையாகவும் பாதுகாப்பாகவும் வாக்களிக்கும் சூழல் உருவாகும் வரை தேர்தலை ஏன் தள்ளி போட கூடாது என ட்ரம்ப் டிவிட்டரில் வினவியுள்ளார். இந்த காலகட்டத்தில் தேர்தலை நடத்தினால் அதில் பல முறைகேடுகள்நடைபெற வாய்ப்பிருப்பதாகவும் ட்ரம்ப் சந்தேகம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அதிபர் ட்ரம்ப், தேர்தலை தள்ளி போடலாமா என அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சமீபத்தில் வினவியிருந்தார்.

Trump

இந்நிலையில் அதிபர் ட்ரம்ப், “அதிபர் தேர்தலில் நான் வெற்றி பெறக்கூடாது என சீனா விரும்புகிறது. நான் தோல்வியடைந்துவிட்டால் அமெரிக்காவுக்குள் எளிதில் நுழைந்து ஆதிக்கம் செலுத்த முடியும் என சீன நினைக்கிறது. தூக்கத்தில் இருக்கும் பிடன் வெற்றி பெற்றால் அது அமெரிக்காவை ஆளமுடியும் என சீனா நினைக்கிறது. சீனாவுக்கு நான் ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். சீனாவின் ஒவ்வொரு நடவடிக்கையும் கவனித்துவருகிறேன். இணையத்தின் மூலம் வாக்களிப்பது மிகவும் ஆபத்தானது. ரஷ்யா, சீனா, ஈரான் மற்றும் வடகொரியா ஆகிய நாடுகள் மூலம் அமெரிக்க அதிபர் தேர்தலில் சதி நடக்க வாய்ப்புள்ளது” எனக் கூறினார்.