இந்தியா மட்டும் உண்மையான கொரோனா உயிரிழப்புகளை வெளியிடுகிறதா? ட்ரம்ப் பகீர் குற்றச்சாட்டு

Trump

கொரோனா இறப்புகளை இந்தியா துல்லியமாக கொடுக்கவில்லை என அதிபர் ட்ரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான முதலாவது நேரடி விவாதம் இன்று நடைபெற்றது. இதில்‌ குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் தற்போதைய அதிபர் ட்ரம்பும், ‌ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் ஜோ பிடனும் பங்கேற்றனர்.

90 நிமிடங்கள் நடைபெற்ற இந்த விவாதத்தில் டிரம்பும் ஜோ பைடனும் அனல் தெறிக்கும் விவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது கொரோனா பரவலை தடுக்க அதிபர் ட்ரம்ப் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், பாதிப்பு, உயிரிழப்பு விவரங்களை வெளிப்படையாக அறிவிக்கவில்லை என்றும் ஜோ பிடன் குற்றஞ்சாட்டினார்.

அமெரிக்காவில் ஏழு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் ஆனால் அதிபர் ட்ரம்பிடம் அதனை தடுப்பதற்கான எந்த திட்டமும் இல்லை என ஜோபிடன் சாடினார். கொரோனா தொற்றை தடுக்க நடவடிக்கை எடுத்துவருவதாக அதிபர் ட்ரம்ப் பொய் கூறுகிறார். அவர் ஒரு பொய்யர் என்பது அனைவருக்குமே தெரியும். அவரின் பொய்யை கேட்க நான் இங்கு வரவில்லை என பிடன் தெரிவித்தார்.

trump

இந்தியாவில் எத்தனை பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர் என்பது தெரியுமா? என கேள்வி எழுப்பிய அதிபர் ட்ரம்ப், கொரோனா உயிரிழப்புகள் குறித்து துல்லியமான புள்ளிவிவரங்களை இந்தியா பகிர்ந்து கொள்ளவில்லை என்றும் கூறினார்.

இந்தியா மட்டுமின்றி சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் விபரங்களை தெளிவாக அளிப்பதில்லை என ட்ரம்ப் பகிரங்கமாக குற்றஞ்சாட்டினார். விரைவில் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுவிடும் என உறுதியளித்த ட்ரம்ப், தற்போதைய சூழலில் அமெரிக்காவில் கொரோனாவால் மிக குறைவான மரணங்களே நிகழ்ந்துகொண்டிருப்பதாக சமாளித்தார்.

இதையும் படிக்கலாமே: அமெரிக்காவில் 6 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் கொரோனாவால் பாதிப்பு!

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter