நியூயார்க் நகர சுகாதாரத்துறை ஆணையராக இந்திய வம்சாவளி நியமனம்

கொரோனா என்னும் கண்ணுக்கு தெரியாத காளானால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு அமெரிக்கா. கொரோனா பரவலால் மக்கள் மட்டுமின்றி, நாட்டின் பொருளாதாரமும் அதளபாதளத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. பொருளாதார சரிவிலிருந்து நாட்டை மீட்டெடுக்க அதிபர் ட்ரம்ப், பலத்துறை வல்லுநர்களை கொண்ட குழுவை நியமித்தார். அவர்கள் அதிபர் ட்ரம்புக்கு ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை வழங்குவர். இந்த குழுவில் சுந்தர் பிச்சை உள்ளிட்ட ஏராளமான இந்திய வம்சாவளிகள் இடம்பெற்றிருந்தனர்.

இந்நிலையில் கொரோனா பரவலை எதிர்த்து போராடகூடிய அசாத்திய திறமைசாலியாக பார்க்கப்படும் இந்தியா வம்சாவளியான டாக்டர், தவே சோக்சி என்பவர் நியூயார்க்கின் புதிய சுகாதாரத் துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். கொரோனா இரண்டாம் அலையால் அமெரிக்கா மேலும் பாதிக்கப்படும் என கூறப்படும் நிலையில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தவும், பாதிக்கப்பட்டோருக்கு சிறப்பான சிகிச்சை அளிப்பதை உறுதிப்படுத்தவும் தவேவுக்கு இந்த பொறுப்பு வழங்கப்பட்டிருப்பதாக நியூயார்க் மேயர், பில் டி பிளாசியோ தெரிவித்துள்ளார். நியூயார்க்கில் சுமார் 2 லட்சத்து 22 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் 23 ஆயிரத்தும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

Dr.-Dave-A.-Chokshi

தனக்கு வழங்கப்பட்ட பொறுப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள தவே சோக்சி,  நியூயார்க் நகர மக்களுக்கு சுகாதார சேவை செய்வதில் பெருமைப்படுகிறேன். ஒன்றாக இணைந்து தொற்றிலிருந்து நகரத்தை மீட்டு ஆரோக்கியமான நகரத்தை மீட்க செயல்படுவோம் எனக் குறிப்பிட்டுள்ளார். டாக்டர் சோக்சி பென்சில்வேனியா பல்கலைக்கழக மருத்துவப் பள்ளி மற்றும் ப்ரிகாம் & மகளிர் மருத்துவமனை, ஹார்வர்ட் மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் பணியாற்றியுள்ளார். டாக்டர் சோக்சி, அதிபராக ஒபாமா இருந்த காலத்தில், அவரை தடுப்பு, சுகாதார மேம்பாடு மற்றும் ஒருங்கிணைந்த பொது சுகாதாரம் தொடர்பான ஆலோசனைக் குழுவில் இடம்பெற்றிருந்தார்.

இதையும் படிக்கலாமே: “ஐசாயாஸ்” புயலில் சிக்கி 6 பேர் உயிரிழப்பு!