அமெரிக்காவை மீட்டெடுத்த தமிழருக்கு “சிறந்த குடியேறி” விருது! அவர் யார் தெரியுமா?

கொரோனா என்னும் கண்ணுக்கு தெரியாத காளானால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு அமெரிக்கா. கொரோனா பரவலால் மக்கள் மட்டுமின்றி, நாட்டின் பொருளாதாரமும் அதளபாதளத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. பொருளாதார சரிவிலிருந்து நாட்டை மீட்டெடுக்க அதிபர் ட்ரம்ப், பலத்துறை வல்லுநர்களை கொண்ட குழுவை நியமித்தார். அவர்கள் அதிபர் ட்ரம்புக்கு ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை வழங்குவர். இந்த குழுவில் சுந்தர் பிச்சை உள்ளிட்ட ஏராளமான இந்திய வம்சாவளிகள் இடம்பெற்றிருந்தனர். அப்படியொரு இந்தியாவம்சாவளியான தமிழ் பேராசிரியரான பத்மஸ்ரீ ராஜ் செட்டியாருக்கு “சிறந்த குடியேறி” எனும் விருது வழங்கி அந்நாட்டு அரசு கௌரவித்துள்ளது.

Raj chetty

உலகின் தலைசிறந்த 10 பொருளாதார மேதைகளில் ஒருவராகக் கருதப்படும் டாக்டர் ராஜ் செட்டி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தலைமையிலான அரசுக்கு பொருளாதார சீர்கேட்டை ஒழுங்குப்படுத்தவும், முன்னேற்றத்திற்கும் சில வழிமுறைகளை வகுத்துக்கொடுத்தார். அமெரிக்க சுதந்திர தினத்தன்று பொருளாதார நிபுணர் ராஜ் செட்டிக்கு இந்த விருந்து வழங்கப்பட்டது.

தமிழகத்திலுள்ள சிவகங்களை மாவட்டம் காரைக்குடிக்கு அருகிலுள்ள புதுவயலைப் பூர்விகமாகக் கொண்ட  ராஜ் செட்டி, ஆரம்ப கால கல்வியை டெல்லியில் படித்தார். பின் தனது 8 வயதில் அமெரிக்காவில் குடிபெயர்ந்தார். அங்கே கல்லூரி பயின்ற இவர், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரப் பேராசிரியராக பணியாற்றிவருகிறார்.

தமிழ்மகன் ஒருவர் அமெரிக்கா மாணவர்களுக்கு பாடமெடுப்பது பெருமைப்படகூடிய விஷயமாகவே பார்க்கப்படுகிறது.