கொரேனாவை குணப்படுத்தும் மாத்திரை!

pill

கொரோனாவை குணப்படுத்தும் மாத்திரைகளை இந்த ஆண்டு இறுதிக்குள் வழங்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

“கொரோனா வைரஸ்” உலகத்தையே அச்சத்தில் உறைய வைத்திருக்கும் வார்த்தை. இதன் பிறப்பிடம் சீனா என்றாலும் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகளில் நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது.

குறிப்பாக அமெரிக்காவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மக்களின் பழக்கவழக்கங்களை மாற்றி, மாஸ்க் அணிந்து, சமூக இடைவெளியுடன் பயணிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.

உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்று அமெரிக்கா.

coronavirus

இதனிடையே அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி அதிதீவிரமாக ஈடுபட்டுவரும் நிலையில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்துவருகிறது.

இந்நிலையில் கொரோனாவை குணப்படுத்தும் மாத்திரைகளை தயாரிப்பதற்காக சுமார் 3 பில்லியன் டாலர் நிதியை அமெரிக்கா ஒதுக்கியுள்ளது.

இப்புதிய திட்டம் முதலில் கொரோனா வைரசுக்கு எதிராகவும் பின்னர் இதர வைரசுகளுக்கு எதிராகவும் செயல்படும் மாத்திரைகளைத் தயாரிக்கவும் குறுகிய காலத்தில் 4 வரை வீரியமான தடுப்பூசிகளைத் தயாரிக்கவும் நிதியுதவியை அளக்கிறது.

எதிர்காலத்தில் கொரோனா உள்ளிட்ட தொற்று நோய்களின் ஆபத்திலிருந்து பாதுகாக்க இத்திட்டம் உதவும் என்று அமெரிக்காவின் மருத்துவ மனித சேவைகள் பிரிவான DHHS அறிவித்துள்ளது.

மெர்க் என்ற வைரசுக்கு எதிரான சிகிச்சைக்கு சுமார் ஒன்றரை மில்லியன் மாத்திரைகளை உற்பத்தி செய்யும் திட்டம் தொடங்கி விட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.