அமெரிக்காவில் ஆதிக்கம் செலுத்தும் இந்திய மாணவர்கள்!

indian students

அமெரிக்காவில் இந்தியா, சீனா உள்ளிட்ட ஏராளமான வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் வேலை செய்துவருகின்றனர்.

இதேபோல் ஏராளமான வெளிநாட்டவர்கள் அமெரிக்க கல்வி நிறுவனங்களில் படித்து வருகின்றனர்.

இந்நிலையில், அமெரிக்காவில் படித்து வரும் ஒட்டுமொத்த மாணவர்களில் 47 சதவீதம் மாணவர்கள் இந்தியா மற்றும் சீனாவை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

ட்ரம்ப் அதிபராக இருந்த காலக்கட்டத்தில் கடும்கட்டுப்பாடுகளால் அமெரிக்காவில் வெளிநாட்டு மாணவர் சேர்க்கை கணிசமாக குறைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

அமெரிக்க அரசு வெளியிட்டுள்ள ஆண்டறிக்கையில், 2020ஆம் ஆண்டில் 12.5 லட்சம் வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்க கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படித்து வருகின்றனர்.

இது 2019 ஆம் ஆண்டை விட 17.86 சதவீதம் சரிந்திருப்பதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்க பள்ளிகளில் 2019ஆம் ஆண்டை காட்டிலும் 2020ஆம் ஆண்டில் வெளிநாட்டு மாணவர் சேர்க்கை 72 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.

அமெரிக்க கல்லூரிகளில் வெளிநாட்டு மாணவர்கள் படிப்பதற்கு F-1 விசா வழங்கப்படுகிறது.

இதேபோல, தொழில்நுட்ப பயிற்சிகள் படிக்க வருவோருக்கு M-1 விசா வழங்கப்படுகிறது.

அமெரிக்க கல்வி நிறுவனங்களில் பயிலும் வெளிநாட்டு மாணவர்களில் சீனாவை சேர்ந்தவர்கள் முதலிடத்திலும், இந்தியாவை சேர்ந்தவர்கள் இரண்டாம் இடத்திலும் இருக்கின்றனர்.

கத்தார், சிரியா, ஏமனிலிருந்து, மிக குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களே, அமெரிக்காவுக்கு படிக்க வந்திருப்பதாகவும் அசர்பைஜான், கம்போடியா, கிர்கிஸ்தான் போன்ற ஆசிய நாடுகளில் இருந்து அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் அமெரிக்கா வந்துள்ளனர் என்றும் அமெரிக்க குடியேற்றம் மற்றும் சுங்க அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது