கமலா ஹாரிசை ‘அதிபர்’ என அழைத்த பைடன்!

kamala biden

உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் வெற்றி பெற்றார்.

அதன் மூலம் இந்திய வம்சாவளி மற்றும் தமிழகத்தை பூர்விகமாக கொண்ட கமலா ஹாரிஸ் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதனால், அமெரிக்க வாழ் தமிழர்கள் மட்டுமின்றி கமலா ஹாரிஸின் பூர்வீக கிராமான துளசேந்திரபுரம் மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

May Good Win Over Evil Again': Joe Biden and Kamala Harris in Navratri Wish  to Hindus

பைடன் கொரோனா தடுப்பூசி மையங்கள் குறித்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது, “இது மிகவும் முக்கியமானது. வேகம் மற்றும் செயல்திறன், நேர்மை மற்றும் சமத்துவத்துடன் பொருந்த வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம்.

அதிபர் ஹாரிஸ் சில நாட்களுக்கு முன்பு அரிசோனாவில் உள்ள ஒரு தடுப்பூசி மையத்திற்கு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார்.

அப்போது, அங்கிருந்த ஒரு செவிலியர், மக்களுக்கு ஊசி போட்டு, தடுப்பூசி கொடுத்து, ஒவ்வொரு டோஸ் போடும்போதும் மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டுமென அவரிடம் கூறினார்” என தெரிவித்தார்.

இந்த சூழலில் அமெரிக்க அதிபர் பைடன், துணை அதிபரான கமலா ஹாரிசை ‘அதிபர்’ என தவறாக அழைத்தது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

இதேபோன்று பதவி ஏற்பதற்கு முன் கமலா ஹாரிசை President elect என பைடன் தவறாக அழைத்தார். அதலால் பைடன் இரண்டாவது முறை, தான் தான் அதிபர் என்பதை மறந்து பேசி வருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது.

இந்நிலையில் மீண்டும் கமலா ஹாரிசை அதிபர் என பைடன் அழைத்ததால், அவருக்கு dementia எனும் மூளைநோய் உள்ளதா என நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கிண்டலடித்துவருகின்றனர்.