உலகின் மிகவும் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் கமலா ஹாரிஸ்!

kamala harris

உலகின் மிகவும் சக்திவாய்ந்த பெண்களின் பட்டியலில் அமெரிக்காவின் துணை அதிபரும் இந்திய வம்சாவளியுமான கமலா ஹாரிஸ் மூன்றாம் இடம் பிடித்துள்ளார்.

பிரபல ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை (FORBES) 2020ஆம் ஆண்டுக்கான உலகின் மிகவும் சக்திவாய்ந்த 100பெண்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதில் இடம்பிடித்துள்ள அனைவரும் வெவ்வேறு துறைகளில் முத்திரை பதித்தவர்கள்.

இந்த பட்டியலில் 10 அரசியல் தலைவர்கள், 38 தலைமை நிர்வாக அதிகாரிகள் மற்றும் ஐந்து பொழுதுபோக்கு துறையை சேர்ந்த பெண்கள் உள்ளனர்.

இந்த பட்டியலில் தொடர்ந்து 10 ஆவது முறையாக ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல் முதலிடத்தில் உள்ளார். ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைவரான கிறிஸ்டின் லகார்ட் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.

kamala harris

இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 41 ஆவது இடத்திலும், நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா 32 ஆவது இடத்திலும் உள்ளனர். அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார்.

இதேபோல் பயோகான் நிறுவனர் கிரண் மஜூம்தர் ஷா, ஹெச்சிஎல் தலைமை நிர்வாக அதிகாரி ரோஷினி நாடார் இந்த பட்டியலில் இடம்பிடித்து உ ள்ளனர்.

ரோஷ்னி நாடார் 55வது இடத்திலும், கிரண் மஜும்தார்-ஷா 68வது இடத்திலும் உள்ளனர். இந்த ஆண்டு பட்டியலில் 17 புதுமுகங்களும் இடம்பிடித்துள்ளனர்.

55 வயதாகும் கமலா ஹாரிஸின் தாய் இந்தியாவை சேர்ந்தவர், தந்தை ஜமைக்காவை சேர்ந்தவர். கமலா ஹாரிஸின் தாய் தமிழகத்தைச் சேர்ந்தவர்.

அவரது உறவினர்கள் சென்னையில் வசிக்கிறார்கள். இவர்களின் பூர்விகம் திருவாரூரில் உள்ள துளசேந்திரபுரமாகும். இவர் வழக்கறிஞராவார்.

இதையும் படிக்கலாமே: ஏலியன்களுடன் அதிபர் ட்ரம்ப் ஒப்பந்தம்?!

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter